கருநாடக த் தமிழர்களை அரசியல் சாயம் இல்லாமல் ஒருங்கிணைக்க வேண்டும்: முன்னாள் பெங்களூர் தமிழ்ச்சங்கத்தலைவர் சண்முகவேலன்
First Published : 24 December 2012 07:02 PM IST
கர்நாடக தமிழர்களை அரசியல் சாயம் இல்லாமல்
ஒருங்கிணைக்க வேண்டும் என்று முன்னாள் பெங்களூர் தமிழ்ச்சங்கத்தலைவர்
து.சண்முகவேலன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகத்தில் எந்த பிரச்னையானாலும் தமிழர்கள் பாதிப்பிற்குள்ளாவது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு தீர்வு காண வேண்டும் என்றால் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். தமிழர்கள் சாதியாலும், மதத்தாலும், அரசியல் கட்சிகளாலும் பிரிந்து கிடக்கின்றனர். இதனால் தமிழர்கள் பலவீனம் அடைந்துள்ளனர். தமிழர்கள் ஒன்றுபட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒற்றுமை மூலம் ஏற்படும் நன்மை, பெருமை, பாதுகாப்பை இளைஞர்கள் மத்தியில் பரப்பவேண்டும். கர்நாடக தமிழர்களின் பொருளாதார, சமூக, மற்றும் உடமைகளுக்கு பாதுகாப்பிற்கு தேவையான திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும்.
தமிழர்களின் பலத்தை வெளிக்காட்டும் நோக்கில் கர்நாடக தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. இது மதம், சாதி, அரசியலை கடந்து அனைத்து தமிழர்களின் பொதுவான இயக்கமாக உள்ளது. இதில் தமிழர்களை அரசியல் சாயம் இல்லாமல் ஒருங்கிணைக்க வேண்டும். அடிப்படையான இந்த நோக்கத்திலிருந்து தடம் மாறி செல்லும் நிலைமை ஏற்படாமல் பொறுப்பில் உள்ளவர்கள் நடந்துகொள்ளவேண்டும். தமிழர்கள் கர்நாடகத்தில் 224 தொகுதிகளிலும் போட்டியிடும் தமிழர் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக