செவ்வாய், 25 டிசம்பர், 2012

1 சி.கோ.(செ.மீ.) கனச் சதுரத்தில் கிறித்துமசு குடில்

1 சி.ோ.(செ.மீ.) கனச் சதுரத்தில் கிறித்துமசு குடில் புதுச்சேரி அரசு ப் பள்ளி ஆசிரியர் சாதனை

புதுச்சேரி :புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், 1 செ.மீ., கன சதுர அளவுள்ள குடில் செய்து, தலா, ஒவ்வொரு அரிசியில் குழந்தை இயேசு, மாதா, சூசையப்பர், கிறிஸ்துமஸ் தாத்தா உருவங்களை உருவாக்கியுள்ளார். புதுச்சேரி, அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர், சுந்தரராசு, 35; பாகூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், நுண்கலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, 1 செ.மீ., கன சதுரம் அளவுள்ள குடில் செய்துள்ளார்.அந்தக் குடில் நடுவே, மிளகுத் தூளைப் பயன்படுத்தி, மலையை உருவாக்கியுள்ளார். தலா, ஒவ்வொரு அரிசியில் ஒரு உருவமாக, குழந்தை இயேசு, மாதா, சூசையப்பர், தேவதை, கிறிஸ்துமஸ் தாத்தா உருவாக்கியுள்ளார்.இயற்கையான புல், செடி, பூக்கள் போன்றவைகளும், இயேசு பிறக்கும் போது தெரியும் வால் நட்சத்திரம், குழந்தை இயேசு மீது படுவது போலவும், உயிரோட்டமாக குடில் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை லென்ஸ் உதவியுடன் மட்டுமே, தெளிவாக பார்க்க முடியும். இந்த மிகச் சிறிய கிறிஸ்துமஸ் குடிலை, அப்பகுதி மக்கள் பலர் பார்வையிட்டு ரசித்து, ஆசிரியருக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக