சொல்கிறார்கள்
"நவீனமுறை மஞ்சள் அறுவடை!'
மஞ்சள் வெட்டும் கருவியை வடிவமைத்துள்ள சுப்பிரமணியம்: என் சொந்த ஊர், ஈரோடு மாவட்டத்திலுள்ள, கவுண்டபாடி கிராமம். குடும்ப வறுமையால், சிறிய வயதில், ஒர்க் ஷாப்பில் வேலைக்கு சேர்ந்தேன்.அதன் பின், தனியாக ஒர்க் ஷாப் ஆரம்பித்தேன். கடந்தாண்டு, மஞ்சள் சாகுபடி செய்யும் பாலு என்பவர், என்னிடம், மஞ்சள் வெட்டும் கருவி செய்து தரும்படி கேட்டார். அதற்காக, ஒரு மாதமாக வயலுக்குச் சென்று, மஞ்சள் எப்படி வெட்டுகின்றனர்; சேதாரம் இல்லாமல், மஞ்சளை எப்படி எடுக்கின்றனர் என்பது போன்ற, பல விஷயங்களைக் கவனித்தேன்.மஞ்சள் வெட்டுவது, சிரமமான வேலை என்பதால், ஆண்கள் மட்டுமே, மண்வெட்டியால் வெட்டுவர். மஞ்சள் அறுவடை செய்ய, ஏக்கருக்கு, 25 ஆட்கள் வரை தேவை. கூலியாக, தலைக்கு, 500 ரூபாய் வரை கொடுக்கின்றனர்.அதற்கு ஏற்றாற்போல், ஒரு கருவியை வடிவமைத்தேன். இது மஞ்சளை வெட்டுவதோடு மட்டுமல்லாமல், மண்ணையும் நீக்கிக் கொடுத்து விடும். கேரள, கர்நாடகா மஞ்சள் விவசாயிகளுக்கும் சேர்த்து இதுவரை, 223 மஞ்சள் வெட்டும் கருவிகளை செய்து கொடுத்துள்ளேன்.கருவி மூலம் மஞ்சள் வெட்டினால், ஏக்கருக்கு, 3,000 செலவில், ஒரே நாளில் அறுவடை செய்து விடலாம். எல்லா மண் வகையிலும், மஞ்சளை வெட்டி எடுக்க வசதியாக செய்துள்ளேன். மஞ்சள் வெட்டும் கருவியோடு, நெல் உலர்த்தும் கருவியையும் கண்டுபிடித்துள்ளேன்.பவர் டில்லர் அல்லது டிராக்டரில் பொருத்தி தான், இக்கருவியை பயன்படுத்த முடியும்.தமிழக வேளாண் துறை காப்புரிமை வழங்கி சிறப்பித்தது மட்டுமல்லாமல், விவசாயிகளையும், வாங்கிப் பயனடைய பரிந்துரையும் செய்துள்ளது. மொபைல்: 94437 88778
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக