திங்கள், 24 டிசம்பர், 2012

ஆறுதல் படுத்தினார் அப்பா!

சொல்கிறார்கள்

ஆறுதல் படுத்தினார் அப்பா!ஓட்டப் பந்தயம் மற்றும் நீளம் தாண்டுதலில், தேசிய சாம்பியன் பெற்ற சித்ரா: சென்னை,அம்பத்தூரில், தமிழக ஸ்பெஷல் போலீசாக பணி புரிகிறேன். சொந்த ஊர், பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி கிராமம். படிக்கும் போதே, விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகள் பெற்றேன்.நீளம் தாண்டுதல் பயிற்சிக்காக, தினமும், 3 கி.மீ., தூரம் சென்று வர வேண்டிய நிலை இருந்தது. இதைப் பார்த்த அப்பா, மணல் வாங்கி, எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள காலி மனையில் கொட்டி, அதில் பயிற்சி எடுக்கச் சொன்னார்.பிளஸ் 2 முடித்ததும், "ஸ்போர்ட்ஸ்' கோட்டாவில், போலீஸ் வேலை கிடைத்தது. திருச்சியில் நடந்த, மாநில அளவிலான போட்டியில், பயிற்சி மேற்கொள்ளும்போது, வலது காலில் அடிபட்டது. அப்போது, "இனி, விளையாடக் கூடாது' என, டாக்டர் சொல்லி விட்டார்.ஆனால், என் அப்பா, "உன்னால் முடியும்; வெற்றி பெறுவாய்' என, ஆறுதல் சொன்னார். அடுத்த நாளே, தீவிர பயிற்சியில் இறங்கி, அந்த போட்டியில், "ஓவர் ஆல் கப்' சோதனையிலும், சாதனை பெற்றேன்.திருமணத்திற்கு பின், கணவரும், என்னை உற்சாகப்படுத்தினார். குழந்தை பிறந்த போது, "உன் உடம்பு அவ்வளவு தான்; இனி விளையாட முடியாது' என, பலரும் கூறினர். ஆனால், "சோர்ந்திடாமல், தொடர்ந்து விளையாடு' என, என்னை உற்சாகப்படுத்தினார் என் கணவர்.இந்தாண்டு, மைசூரில் நடந்த, தேசிய அளவிலான ஓட்டப் பந்தயத்தில், 10 கி.மீ., தொலைவை, 39.40 நிமிடங்கள் ஓடி, சாதனையை முறியடித்தது, பெருமையாக இருந்தது.நவம்பர் மாதம், சீனாவில் நடக்கிற, சர்வ தேச அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க உள்ளேன். இப்போட்டியில், இந்தியாவில் இருந்து பங்கேற்க உள்ள, 22 பேரில் நானும் ஒருத்தி.இதுவரை, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில், 50க்கும் மேலான தங்கம், 30க்கும் மேலான வெள்ளி மற்றும் 40க்கும் மேலான வெண்கலப் பதக்கங்கள் வாங்கி யிருக்கிறேன்.சர்வதேச அளவில், ஒரு தங்கமாவது வாங்க வேண்டும் என்பது தான், என் லட்சியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக