புதன், 20 ஜூன், 2012

Tamil leaders wearing tamil mask: தமிழ் முகமூடி அணிந்த தமிழகத்தலைவர்கள்!

தமிழ் முகமூடி அணிந்த தமிழகத்தலைவர்கள்!

பிரணாப்பிற்கு மரு.இராமதாசும்  தன் கட்சி வாக்களிக்கும் என அறிவித்துள்ளார்.  கொலை காரக் கூட்டாளியின் அரசில்  வாய்மூடியாக இருந்த தி.மு.க. தன் வண்ணம் வெளுத்துக் கொண்டு வந்தாலும்
காங்.ஐ அடி யொற்றிப் பிழைப்பு நடத்துவதில் வியப்பில்லை. நான் ஒழுக்கமாக இருக்க வேண்டும் எனப் பிறரை அழைத்தேன். ‌ என் பேச்சைச் செவி மடுப்பார் யாருமில்லை. எனவே, நானும் 'சோரம் போனேன்' என்பது போல் பேசி வரும் திருமாவும்  சாதிக் கூட்டத்தினரை நம்பி இனப் பாதையில் தடம் புரள்வதால்
மதியாதார்  தலை வாசல் மிதியாமை  கோடிபெறும் என்பதை மறந்து சொக்கத்தங்கம் இல்லம் சென்று ஆதரவு தெரிவித்து வந்துள்ளார். மரு.மட்டும் சும்மா இருக்க இயலுமா?  கொத்துக் குண்டுகள் அடை மழை போல் பெய்த பொழுதே ஆட்சிச் சுவையைச் சுவைத்தவராயிற்றே. எனவே இன்னும் பின் தங்கினால்  பேரத்தில் பின்வாங்க நேரும் என அஞ்சிக் காங்.ஐ ஆதரிக்கிறார்.
விசயகாந்த்து காங். ஐ எதிர்ப்பதில் உறுதியாக இருந்தால் பாராட்டலாம்.
பொய்க்காரணம் கூறிக் கொ‌லைகாரக் கட்சிக்கும்
 போரை நிறுத்துவதாகப் பொய்  சொல்லி இனப்படுகொலையில்
 பங்கு வகித்தவர்க்கும்  ஆதரவு தருவதை விட சங்மாவை ஆதரிக்கலாமே. அ.தி.மு.க. ஆதரிப்பதால்  எதிர்க்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை.  தனிப்பட்ட முறையில ஆதரிக்கலாம். அல்லது தேர்தலைப் புறக்கணிக்கலாம்.  இவர்களின்  பொய்ம்முகங்கள‌ை நம்பும் மக்கள் இருக்கும் வரை இவர்களுக்கு இதை ப்பற்றி எல்லாம்
 என்ன கவலை?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக