First Published : 17 Jun 2012 12:00:00 AM IST
நேபாளத்தைச்
சேர்ந்த டெம்பா ஷெரி ஷெர்பா என்னும் பதினாறு வயது சிறுவன்தான் (கடந்த
2001-ல்) குறைந்த வயதில் எவரெஸ்டின் உச்சியை அடைந்த வளர் இளம் பருவத்தினன்
என்னும் சாதனையைச் செய்தான். அமெரிக்காவின் ஜோர்டான் ரோமரோ தன்னுடைய 13
வயதிலேயே ஷெர்பாவின் சாதனையை முறியடித்த சிறுவனாக உலகம் முழுவதும்
கொண்டாடப்பட்டான். ஆம்.. இவன் எவரெஸ்டின் உச்சியைத் தொட்டது 13 வயதில்!நிமா
செம்ஜி ஷெர்பா என்னும் பதினாறு வயது சிறுமி சமீபத்தில் எவரெஸ்டின் உச்சியை
மலை ஏறும் வீரரான அவளுடைய தந்தையுடன் அடைந்திருக்கிறாள். உலகில் மிகக்
குறைந்த வயதில் எவரெஸ்டின் உச்சியை அடைந்த பெண் என்பதற்காக ஷெர்பாவின்
பெயர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற இருக்கிறது.நேபாளச்
சிறுமியின் இந்த சாதனை நிகழ்ந்த மூன்றாவது நாளில் ஜப்பானைச் சேர்ந்த டாமே
வாடனேப் என்னும் பெண்மணி தன்னுடைய 73 வயதில் எவரெஸ்டின் உச்சியை அடைந்து,
எவரெஸ்டின் உச்சியை இதற்கு முன் அடைந்த மிக அதிகமான வயதுடைய பெண்மணியின்
சாதனையை முறியடித்துள்ளார். எவரெஸ்டின் உச்சியை இதற்கு முன் (கடந்த
பத்தாண்டுகளுக்கு முன்) தன்னுடைய 63-ஆவது வயதில் அடைந்தவரும் டாமே
வாடனேப்தான்! அவருடைய சாதனையை அவரே முறியடித்திருப்பதுதான் மிகப் பெரிய
சாதனை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக