திங்கள், 18 ஜூன், 2012

ஈழத்தமிழ்ச்சொ்நதங்களை விடுவிக்க வேண்டி முதல்வருக்குத் தொலைவரி அனுப்புக

புகழேந்தி தங்கராசு
திரைப்பட இயக்குநர்
அலைபேசி: 9841906290

அன்புடையீர், வணக்கம்.

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் நீண்ட நெடுங்காலமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ்ச் சொந்தங்களின் அவலநிலையை நீங்கள் அறிவீர்கள். தங்களை விடுவிக்கக்கோரி, சென்ற மாதம் அவர்கள் மேற்கொண்ட அறவழி உண்ணாவிரதப் போராட்டம், அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் கைவிடப்பட்டது. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் மீண்டும் அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளைத் திறந்தவெளி முகாமுக்கு மாற்ற வேண்டும், அவர்கள் மீதான வழக்குகளைக் கைவிட வேண்டும் - என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக முதல்வருக்கு பெரும் எண்ணிக்கையில் தந்தி அனுப்புவதென்று ஈழச் சொந்தங்களின் நலனில் அக்கறை கொண்ட பல்வேறு தரப்பினரும் இணைந்து முடிவெடுத்துள்ளோம்.


19.6.2012 செவ்வாய்க்கிழமை காலையில், பல்வேறு தமிழ் அமைப்புகளும், அரசியல் இயக்கங்களும், தமிழ் உணர்வாளர்களும் - சென்னை அண்ணா சாலையில் சாந்தி திரையரங்குக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள தலைமை அஞ்சல் நிலையத்திலிருந்து தமிழக முதல்வருக்குத் தந்திகளை அனுப்ப உள்ளனர். காலை 10 மணியிலிருந்து 12 மணிக்குள், இரண்டு மணி நேரத்தில், நூற்றுக்கணக்கான தந்திகள் அனுப்பப்பட இருப்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர கடமைப்பட்டுள்ளோம்.

அனைத்துத் தமிழ் உணர்வாளர்களும், இதைத் தங்கள் கடமையாகக் கருதி, அண்ணா சாலை அஞ்சல் நிலையத்துக்கு, 19ம்தேதி செவ்வாய்க்கிழமை  காலை நண்பர்களுடன் நேரில் வந்து தந்தி கொடுக்கவேண்டும் என்று உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!

ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில்
புகழேந்தி தங்கராஜ்
18.6.12.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக