வியாழன், 21 ஜூன், 2012

நிலாவிற்குச் செல்லலாம் உரூ700 கோடி இருந்தால்!

 
பூமியில் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வருகிறோம். தற்போது விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் அளவுக்கு அறிவியல் வளர்ச்சி அடைந்து விட்டது. அதை பயன்படுத்தி சந்திரனுக்கு ஆட்களை சுற்றுலா அழைத்து செல்லும் நடவடிக்கையில் இங்கிலாந்து நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
 
அதற்காக ஒருநபர் சந்திரனுக்கு சென்று வர ரூ.700 கோடி கட்டணம் நிர்ணயித்துள்ளது. அதற்காக ரஷியா நிறுவனத்திடம் இருந்து 6 விண்கலங்களை விலைக்கு வாங்கி உள்ளது.
 
ஒரு விண்கலத்தில் 3 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். சந்திரனுக்கு சென்று வரும் பயண திட்டம் வருகிற 2015-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
 
தற்போது, சர்வதேச விண்வெளி மையத்துக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். அதையும் தாண்டி பூமியில் இருந்து 3 லட்சத்து 76 ஆயிரத்து 586.5 கி.மீட்டர் தூரம் சென்று திரும்பும் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இது குறித்து லண்டனில் உள்ள வெஸ்ட் மனிஸ்டரில் நேற்று செயல்முறை விளக்கம் நடத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக