திங்கள், 18 ஜூன், 2012

சொல்கிறார்கள் : "தரம் முக்கியம்!'

சொல்கிறார்கள்
"தரம் முக்கியம்!'

பினாயில் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் சுதா: எனக்கு திருமணமான போது, குடும்பப் பொறுப்பை மன நிறைவுடன் ஏற்றுக் கொண்டேன். சில ஆண்டுகளுக்குப் பின், "உனக்கும், குடும்பத்திற்கும் ஏற்ற வேலையை தேடிக் கொள்ளலாமே' என, பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் ஊக்கப்படுத்தினர். அப்போது தான், சிறிய அளவில் பிசினஸ் ஆரம்பிக்கலாம் என, களமிறங்கினேன்.குழந்தைகளுக்குப் பயன்படுத்தும், சோப் தயாரிக்கலாம் என, முடிவெடுத்து இதுபற்றி அறிந்து கொள்ள கணவருடன் மும்பை சென்றேன். சோப்பை விட, பினாயிலுக்கு நல்ல மார்கெட் உள்ளதை அறிந்து கொண்டோம். பினாயில் குறித்து, பல விஷயங்களைத் தெரிந்து கொண்டோம். "பிசினஸ்' வெற்றிடைய, சில ரகசியங்கள் உள்ளன. அதில் முக்கியமானது, அதிக புழக்கத்தில் உள்ள பொருளைத் தயாரிக்க வேண்டும், அந்தப் பொருளுக்கு ஏற்ற பெயரை வைக்க வேண்டும்.எங்கள் தயாரிப்பு, சுகாதாரம் சம்பந்தமான விஷயம் என்பதால், "டாக்டர் கிளீன்' என, பெயர் வைத்தோம். அதன் பின், தயாரித்த பொருளை சந்தைப் படுத்துவதில், படிப்படியாக முன்னேறினேன். கிடைக்கும் லாபத்தை, தொழிலேயே மீண்டும் முதலீடு செய்தேன். "பிசினசில்' மிகவும் கவனமாக இருக்க வேண்டிய இடம், போலி தயாரிப்புகள். இதை நாம் நிதானமாக கையாள வேண்டும்.பினாயில் தயாரிப்பிற்கு, முக்கியமான பொருள், "பைனாயில்!' இதைப் பயன்படுத்தினால், தரமான பினாயிலை தயாரிக்கலாம். சிலர் பெட்ரோலியத்தில் இருந்து வரும், "க்யூமின்' என்ற பொருளைப் பயன்படுத்துவர். இதைப் பயன்படுத்தினால், குறைந்த விலையில், அதிக பாட்டில்கள் தயாரிக்க முடியும். ஆனால், தரம் இருக்காது.அப்படி எங்களை காப்பியடித்து, மார்க்கெட்டை பிடித்த சிலர், ஆறேழு மாதத்தில், காணாமல் போய் விட்டனர். தற்போது, எங்களின் தயாரிப்பு, எட்டு மாவட்டங்களில் சிறப்பாக விற்பனையாகிறது. வெறும் 5,000 ரூபாய் முதலீட்டில், "பிசினஸ்' ஆரம்பித்த நான், இன்று, மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை லாபம் பார்க்கிறேன்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக