வியாழன், 21 ஜூன், 2012

சிறப்பு முகாம்வாசி திரு. பராபரன் அவசரமாய் மருத்துவமனையில் சேர்ப்பு

உருக்கமான கடிதம் எழுதிய உண்ணாநிலை சிறப்பு முகாம்வாசி திரு. பராபரன் அவசரமாய் மருத்துவமனையில் அனுமதி
http://www.manitham.net/
கடந்த 15ம் தேதி காலை முதல் தமிழக அரசு அதிகாரிகளால் கொடுக்கப்பட்ட விடுதலை உறுதிமொழியினை நடைமுறை படுத்தக்கோரி ஆறு செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் உண்ணாநிலை மேற்கொண்டு வருகின்றனர்.  இவர்களோடு, மேலும் இருவர் சேர்ந்துள்ளதால், தற்போது 8 பேர் உண்ணாநிலையில் பங்கெடுத்து வருகின்றனர்.
வலிப்பு நோயும், தண்டுவட சிதைவுமுள்ள திரு. பராபரன் உண்ணாநிலை ஆரம்ப நாளிலிருந்து மருந்து எதுவும் எடுக்காமல் உண்ணாநிலையில் பங்கெடுத்துக் வந்ததால், நேற்று தீடீரென உடல்நிலை மோசமானது. ஆதனால், அவசரமாக செங்கல்பட்டு மருத்துவமனையிலிருந்து இரு மருத்துவர்கள் உண்ணாநிலை மேற்கொள்வோரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். திரு. பராபரனின் உடல் நிலைய மோசமானதை கருத்தில் கொண்டு, அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறி, அவசர ஊர்தி வருவழைக்கப்பட்டு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதனிடையே திரு. பராபரனின் நெஞ்சை உருக்கமான 2 பக்க கடிதம்  நேற்று மனிதம் என்ற மனித உரிமை அமைப்பிற்கு கிடைத்துள்ளது. கடிதத்தோடு, அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதற்கான மருத்துவரின் சான்றிதழும் இணைக்கப்பட்டுள்ளது. அவரது கடிதத்தில், இலங்கையின் இனப்படுகொலையிலிருந்து உயிரை தக்க வைத்துக் கொள்ள 'தொப்புள் கொடி உறவு' என்ற நினைத்து தமிழகம் வந்தோம் என்றும், தான் குடும்பத்தோடு இணைந்தில்லாததினால், தனது மனைவி மற்றும் குடும்பம் வறுமை காரணமாக பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாயும், இதனாலேயே விடுதலை வேண்டி, தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உண்ணாநிலை மேற்கொண்டதாய் கூறியுள்ளார். 
மனிதம் அமைப்பிற்கு செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள 29 ஈழ ஏதிலிகளும் திரு. பராபரனின் கடிதம் போன்றே மனு கிடைக்கப் பெற்றுள்ளது. அனைத்து மனுக்களையும், தமிழக முதல்வருக்கும் அரசு உயர் அதிகாரிகளுக்கும் சேர்க்கவும், இவர்களின் விடுதலைக்கான மேல் நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மனிதம் அமைப்பின் தலைவர் அக்னி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
- திரு. பராபரனின்  கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.
- காணொளிகள் :
  1. மருத்துவர் பரிசோதனை : http://youtu.be/7cKI3tJeC8o
  2. திரு. பராபரன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுதல் : http://youtu.be/CjT7PQUy7NM
www.manitham.net
manitham@gmail.com
2 attachments — Download all attachments   View all images   Share all images  
pg1.jpgpg1.jpg
349K   View   Share   Download  
pg2.jpgpg2.jpg
383K   View   Share   Download  
YouTube - Videos from this email

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக