புதன், 20 ஜூன், 2012

A poor boy need help to study medical education

எல்லார்க்கும் எல்லா நிலை க் கல்வியும் கட்டணமின்றிக்கிடை க்கும் நாள் எந்நாளோ!
 மெடிக்கல் "கட்-ஆப்' 196 பெற்ற ஏழை மாணவர்: டாக்டர் கனவு நிறைவேறுமா?

திருச்செங்கோடு : பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில், மெடிக்கல் "கட்-ஆப்'பில், 196 பெற்ற ஏழை மாணவரின் டாக்டராகும் கனவு நிறைவேறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம், கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் மாணவர் சுரேந்திரன். பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில், 1,200க்கு 1,149 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதலிடம் பிடித்தார். மேலும், மெடிக்கல் "கட்-ஆப்' 196, இன்ஜினியரிங் "கட்-ஆப்' 195 பெற்று சாதனை படைத்துள்ளார்.

இலவசம்:அம்மாணவர், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில், 500க்கு, 483 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். அதை தொடர்ந்து, மல்லசமுத்திரம் அருகே உள்ள விநாயகா மேல்நிலைப் பள்ளியில், இலவசமாக கல்வி பயின்றார். அதிக அளவில் மதிப்பெண் பெற்றுள்ள மாணவர் சுரேந்திரன், உயர் கல்வி படிப்பதற்கு வசதி இல்லாததால், தன் தந்தையுடன் கூலி வேலைக்கு சென்று வருகிறார். அதனால், அம்மாணவரின் எதிர்கால கனவான டாக்டராகும் எண்ணம், கேள்விக்குறியாகி உள்ளது.அவரது பெற்றோர் முருகேசன்-சத்யவாணி கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுகின்றனர். கிடைக்கின்ற சொற்ப வருமானத்தில் கஷ்ட ஜீவனம் நடத்தி வருகின்றனர்.

இது குறித்து மாணவர் சுரேந்திரன் கூறியதாவது:""எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், 483 மதிப்பெண் பெற்றதால், விநாயகா மேல்நிலைப் பள்ளியில் இலவசமாக படிக்க முடிந்தது. தற்போது, மெடிக்கல் கட்-ஆப், 196 பெற்றுள்ளேன். நான் இருதய மருத்துவ படிப்பு முடித்து, ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது எனது கனவு.''

சுரேந்திரனின் பெற்றோர் கூறியதாவது:""சுரேந்திரன் அதிக மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன், இதுவரைக்கும் படிக்க வைத்தேன். எங்களது மகனுக்கு மெடிக்கல் "சீட்' கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வறுமை காரணமாக, சுரேந்திரனின் டாக்டராகும் கனவு, வெறும் கனவாகி விடுமோ என அச்சமாக உள்ளது.''இவ்வாறு கூறினர்.

உதவி செய்ய விரும்புவோர், 97919 15986 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக