ஞாயிறு, 17 ஜூன், 2012

solkiraarkal about diabetics and solar

இளைஞர்களே! விழித்திடுக! இதய - நீரிழிவுப் பண்டுவ வல்லுநர் அரிகரன்: 

ஒருவருக்கு சர்க்கரை நோய் வருவதற்கு, இரண்டு விதமான காரணங்கள் உள்ளன. ஒன்று மரபு ரீதியாக, அதாவது ஒரு குடும்பத்தில், அம்மாவிற்கோ, அப்பாவிற்கோ சர்க்கரை நோய் இருந்தால், அவர்களின் பிள்ளைகளுக்கும், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மற்றொன்று, மாறி வரும் வாழ்க்கை முறை. உடல் உழைப்பு குறைவது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது மற்றும் அதிக கலோரி உள்ள உணவுகளை உண்பது.கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், 40 வயதுகளில் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம். ஆனால், இப்போது, நிலைமை வேறு. ஏதேனும் கொறித்துக் கொண்டே , கம்ப்யூட்டர் முன் பழியாகக் கிடக்கின்றனர். இதனால், 20 - 30 வயதுகளிலேயே சர்க்கரை நோய்க்கு உள்ளாகின்றனர்.குறிப்பாக, இளைஞர்களின் உணவு முறை மோசமாக மாறிவிட்டது. இவர்கள் அதிகம் விரும்பும் உணவுகளான, பிட்சா, பர்கர், கேக், நூடுல்ஸ், பரோட்டா, பேக்கரி வகைகள் போன்ற அனைத்திலும், மைதா தான் மூலப் பொருள்.

நம் உடலில் உள்ள கணையத்தில் இருக்கும், "பீட்டா' எனும் செல்களில் தான் இன்சுலின் உற்பத்தி ஆகிறது. மைதாவில் உள்ள, "அலாக்சன்' என்ற வேதிப் பொருள், இன்சுலின் உற்பத்தியைக் குறைக்கும் வல்லமை கொண்டது. இதா லேயே, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.மைதா சாப்பிடுபவர்கள் அனைவருக்கும், சர்க்கரை நோய் வரும் என்றில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு விதமான உடல் வாகு இருக்கும். மைதாவை, தொடர்ந்து பயன்படுத்தும் சிலருக்கு, சர்க்கரை நோய் உண்டாகலாம்; சிலருக்கு, உண்டாகாமலும் போகலாம்.ஆனால், பரம்பரையாக சர்க்கரை நோய் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக இளைஞர்கள், மைதா உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. அடுத்த தலைமுறையை, உருவாக்கப் போகும் குழந்தைகளை, ஆரோக்கியமாக வளர்க்க வேண்டியது நம் கடமை.


"சோலார் மூலம் வேளாண்...

'சூரிய ஒளியைப் பயன்படுத்தி, தன் தோட்டத்திற்கு தண்ணீர் இறைக்கும் விஜய குமார்:என் சொந்த ஊர், கேரள மாநிலம் கலங்கல். எங்களுடையது, பாரம்பரியமான விவசாயக் குடும்பம். அப்பாவிற்கு, என்னை இன்ஜினியராக்கிப் பார்க்க வேண்டும் என ஆசை.நானும், எந்திரவியல் படித்துவிட்டு, மிகப் பெரிய நிறுவனங்களில், 40 ஆண்டுகள் வேலை பார்த்தேன். என் பிள்ளைகளும், அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டனர்.அப்போது தான், ஒரு யோசனை தோன்றியது. நம் படிப்பை, விவசாயத்திற்குப் பயன்படுத்தலாம் என, நினைத்தேன். வேலையை விட்டுவிட்டு, தோட்டத்தை வாங்கி, முழு நேர விவசாயியாக மாறிவிட்டேன்.

என் கிணற்றில், ஆண்டு முழுவதும் நீர் இருக்கும். ஆனாலும், தென்னை மரத் தோட்டத்திற்கு, சொட்டு நீர்ப் பாசனம் தான் செய்கிறேன். ஆரம்பத்தில், காய்ப்பு குறைவாக இருந்தாலும், என் தொடர் கவனிப்பில், காய்ப்பிற்கு குறைவில்லை. அந்த நேரத்தில் தான், 10 மணி நேர மின்வெட்டு பிரச்னை என்னை அசைத்துப் பார்த்தது.நேரத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல், தென்னை மரங்கள் எல்லாம், காய ஆரம்பித்தன. ஜெனரேட்டர் வாங்கச் சொல்லி, பலரும் வற்புறுத்தினர். ஆனால், என் கவனம் சோலார் பம்ப் செட் பக்கம் திரும்பியது. உடனே, அரை சென்ட் நிலத்தை, இந்த சோலார் அமைப்பிற்காக ஒதுக்கி, ஐந்து எச்.பி., மோட்டரை இயக்கும் அளவிற்கு, சோலார் பேனல்களை அமைத்தேன். தற்போது, தண்ணீர் அருவி போல கொட்டுகிறது. ஒரு மணி நேரத்தில், 6,000 முதல், 8,000 லிட்டர் வரை, தண்ணீர் இறைக்க முடிகிறது.

காலை முதல் மாலை வரை, சூரிய ஒளி இருக்கும் நேரம் முழுவதும், இந்த மின்சாரத்தைப் பயன்படுத்தி, தண்ணீரைச் சேமித்து வைத்து, அப்படியே சொட்டு நீர்ப் பாசனம் செய்கிறேன். இந்த சோலார் அமைப்பின் ஒரே பிரச்னை, இதற்கான விலை தான். விவசாயிகள் இந்த சோலார் அமைப்பை பயன்படுத்த அரசு ஊக்குவிக்க வேண்டும்.தொடர்புக்கு: 97900 05054.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக