திங்கள், 25 ஜூன், 2012

கொடுமையிலும் கொடு்மை ! 2 ஆயிரம் தமிழர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்புகிறது சுவிட்சர்லாந்து

  புகலிடம் மறுப்பவர்கள் சில காலம் ஈழத்தில் இருந்து  இன்னல்களைப் புரிந்து கொள்ளட்டும்!
2 ஆயிரம் தமிழர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்புகிறது சுவிட்சர்லாந்து



தஞ்சம் கேட்ட சுமார் 2 ஆயிரம் தமிழர்களின் கோரிக்கையை நிராகரித்து அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப சுவிட்சர்லாந்து அரசு முடிவுசெய்துள்ளது.ஒவ்வொரு மாதமும் 100-க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் புகலிடம் கேட்டு சுவிட்சர்லாந்து வருகின்றனர். எனினும் அவர்களில் பெரும்பாலானோர் தங்களின் கோரிக்கைக்கு வலுவான காரணங்களை காட்டுவதில்லை என்று சுவிட்சர்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.புகலிடம் கேட்டு வந்தவர்களை திருப்பி அனுப்பும் சுவிட்சர்லாந்து அரசின் முடிவுக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக சுவிட்சர்லாந்து நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்றையும் தமிழ் அமைப்புகள் நடத்தின.
கருத்துகள்

தனகளை அகதிகள் என்று சொல்லிகொண்டு பணக்கார நாடுகளில் குடி ஏறுவது ஏன் தவறு என்று தோன்றினால் மன்னிக்கவும்
By sa
6/25/2012 6:46:00 PM
ஒவ்வொரு நாடுகளிலும் அகதிகளாக வருபவர்களை அன் நாடு அனுமதிக்கவேண்டும் அவர்களுக்கு தேவையான உதவிகளை அந்நாடு செய்யவேண்டும் என்பது உலக நியதி இதை கடந்த ஒரு வாரங்களுக்கு முன் ஐகிய நாடுகள் தலைமை செயலர் பான் கி மூன் தெரிவித்தார் .எனவே இது வன்மையாக கண்ண்டிக்கதகது .
By mahendran
6/25/2012 5:17:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக