வியாழன், 28 ஜூன், 2012

அசைவூட்டக் கலை பயிலலாம். - சொல்கிறார்கள்!

சொல்கிறார்கள்

"அனிமேஷன் படிக்கலாம்...!'



ஜெ.ஜெ., கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் துறை தலைவர் தினகரன்: தற்போது அனிமேஷன் துறையில், ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. பிளஸ் 2 தகுதி இருந்தால், பல பல்கலைக் கழகங்கள் மற்றும் தனியார் தரப்பில், வழங்கப்படும், பி.எஸ்.சி., அனிமேஷன் படிப்புகளில் சேரலாம். திரைத்துறை மற்றும், "டிவி'களில் 2டி, 3டி டிசைனிங் மற்றும் கம்ப்யூட்டர் அனிமேஷன் துறையில், அதிக வருமானத்தில் வாய்ப்புகள் உள்ளன. கலை ஆர்வம் உள்ளவர்களுக்கு அதிக வாய்ப்பும், சுவாரசியமும் உள்ள மற்றொரு துறை, விளம்பர நிறுவனங்களில் பணிபுரிவது. தனியார் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுடன் இணைந்து, பல தனியார் கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் விளம்பரத் துறைக்கான பயிற்சிகளை வழங்குகின்றன. பட்டப் படிப்பு தவிர்த்து, டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளும் இவற்றில் அடங்கும். இந்நிறுவனங்களில் சேரும் போது, அவற்றிற்கிடையேயான கட்டண வித்தியாசம், அவர்கள் தரும் சான்றிதழை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியுமா, போன்ற வற்றை உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியம். சில பல்கலைக் கழகங்கள் இதே படிப்புகளை, தொலைதூரப் படிப்புகளாகவும் நடத்துகின்றன. ஆனால், செய்முறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் இந்தப் படிப்புகளுக்கு, தொலைதூரப் படிப்பு ஏற்றது அல்ல. ஓவியக் கலையில் எளிமையான, ஸ்திரமான வாய்ப்பு, பள்ளி ஓவிய ஆசிரியராக தகுதி பெறுவது. இதற்கு, அருகில் உள்ள ஓவியப் பயிற்சி மையங்களில், நேரடியாகச் சேர்ந்தோ, தபால் மூலமாகவே அரசு வரையறுத்துள்ள படிப்புகளை முடிக்க வேண்டும். பின், அரசின் தொழில்நுட்ப சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும். மூன்று மாத பயிற்சிக்குப் பின், ஓவிய ஆசிரியர் தேர்வை எழுதி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். காலிப் பணியிடங்களைப் பொறுத்து, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஓவிய ஆசிரியராக அரசுப் பணியில் சேரலாம். இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதிய விகிதம் இவர்களுக்கு கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக