ஞாயிறு, 24 ஜூன், 2012

விசுவரூபம் படத்தலைப்புக்கு எதிர்ப்பு

விசுவரூபம் படத்தலைப்புக்கு எதிர்ப்பு! 

இந்து மக்கள்கட்சி அமைப்பாளர் திரு கண்ணன், தமிழ் உணர்வுடன் செயல்பட்டு வருகின்றார். தமிழ்ப்படங்களுக்குத் தமிழில் பெயரிட வேண்டும் என்னும் தமிழ் உணர்வைச் சரியாகவே வெளிப்படுத்தி உள்ளார். இதே போல் தமிழ்க்காப்புக் கழகம் சார்பிலும் நட்பு இணைய இதழ்மூலம் வேண்டுகோள் விடப்பட்டது. தமிழ்நாட்டில் அனைத்துத்துறைகளிலும் தமிழுக்கே தலைமையும் தமிழர்க்கே முன்னுரிமையும் இருந்தால்தான் தமிழ்நாடு உயர்ந்தோங்கும். எனவே, அவரது வேண்டுகோளைக் கேலி செய்யாமல் நாமும் வேண்டுகோளை  வழிமொழிவோம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

 விஸ்வரூபம் படத்தலைப்புக்கு எதிர்ப்பு!
 நடிகர் கமல்ஃகசனின் நடிப்பில்  பெ ருஞ் செலவில்  தயாராகி வெளியாகவுள்ள விசுவரூபம் படத் தலைப்புக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் நடிகர் கமல் ஃகசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் '' தமிழகத்தில் வாழ்ந்து பெறும் புகழும் பெற்றுள்ள நீங்கள் தமிழ் மொழியை கண்டு கொள்ளாதது ஏன்? புதிய படத்துக்குச் சூட்டி இருக்கும் விசுவரூபம் என்பது சமசுகிருதச் சொல். அதை மாற்றி நல்ல தமிழ்ப் பெயராக வைத்து மற்றவர்களுக்கெல்லாம் முன் எடுத்துக் காட்டாகத்  திகழ வேண்டும். தமிழ் மொழி மீது உள்ள  பற்றால் இதைத் தெரிவிக்கிறோம். எங்கள் எண்ணங்களை புரிந்து கொள்ள வேண்டும்'' என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. கமல் இதே போன்று முன்னர் தன்னுடைய படத்துக்குச் சண்டியர் எனப் பெயர் வைத்து விட்டுப் பின்னர் எதிர்ப்பு கிளம்பியதால் விருமாண்டி என்று மாற்றியது குறிப்பிடத் தக்கது.

நன்றி : இந்நேரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக