செவ்வாய், 26 ஜூன், 2012

இணைய வழி வாங்கல்

சொல்கிறார்கள்

"ஆன்-லைன் ஷாப்பிங்'தெரியுமா?



இந்தியாவில் முதன் முதலாக, "ஆன்-லைன் ஷாப்பிங், இண்டியா பிளாசா.காம்' என்ற, இணையதளத்தை ஆரம்பித்த வைத்தீஸ்வரன்: கடைக்குச் சென்று, பொருட்கள் வாங்கும் போது, பயணச் செலவுகளில் ஆரம்பித்து, நேரம், உடல் களைப்பு துவங்கி, பல விரயங்கள் ஏற்படும். இதை தவிர்க்க, அனைத்து பொருட்களையும் வீட்டிலிருந்தே, "ஆன்-லைன் ஷாப்பிங்' மூலம், வாங்க முடியும்.பெரிய கடைகளில், கரன்ட் பில், ஊழியர்களின் சம்பளம், கடை வாடகை, "ஏசி' முதல் அத்தனை செலவுகளும், வாங்கப்படும் பொருட்களின் விலையில் தான் சேர்க்கப்படும். ஆனால், ஆன்-லைன் ஷாப்பிங்கில் இந்தச் செலவுகள் பெருமளவு இருக்காது. அதனால், கடைகளை விட, இணையதளத்தில் விலை குறைவாகவே இருக்கும்.முதலில், இணையதள வர்த்தகத்தில் உள்ள பல வித, "வெப்சைட்'களையும் தெரிந்து கொள்ள வேண்டும்; அவற்றில் எது பிரபலமானது, நம்பிக்கையானது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தொடர்பு முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் ஐ.டி., புகார் எண் என, அனைத்தும் குறிப்பிடப்பட்ட, வெப்சைட்களே பரிந்துரைக்கத்தக்கது. இ-மெயில், ஐ.டி., மட்டும் தந்திருக்கும், வெப்சைட்களைத் தவிர்க்க வேண்டும்.போலி, வெப்சைட்களும் நிறைய புழக்கத்தில் உள்ளன; கவனம் தேவை. ஒரு பொருளை வாங்க நினைக்கும் போதே, எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.பொருள் கையில் கிடைக்கும் போது, ஏதேனும் சேதமாகியிருந்தால், சில இணையதள வர்த்தக வெப்சைட்கள் அவற்றை மீண்டும் ஏற்க மாட்டார்கள்; சிலர், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ஏற்றுக்கொள்வர். வெப்சைட்டில் இது பற்றிய தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.இணையதள வர்த்தகம் மேற்கொள்ளும் போது, நாம் கவனமாக இருந்தால், குறைந்த விலையில், சுலபமாக பொருட்கள் வாங்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக