ஷார்ப் நிறுவனம் புதிய 90 இன்ச் உலக மெகா சைஸ் டிவியைக் களமிறக்க உள்ளது. திரையரங்கத் திரை போல் இருக்கும் இந்த டிவிக்கு ஆகுவோஸ் எல்இடி டிவி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. 4 அடி உயரம், 6 அடி அகலம் மற்றும் 8 அடி நீளத்தில் வரும் இந்த டிவி பார்ப்பதற்கு மிகவும் பிரமாண்டமாக இருக்கும். அதுபோல் இந்த டிவியை வீடுகளில் வைத்தால் இந்த டிவிதான் வீ்ட்டின் மையமாக இருக்கும். இந்த பிரமாண்ட டிவி மிகவும் துல்லியமாக இருக்கும். ஏனெனில் இதன் ரிசலூசன் அதிகமாக இருக்கிறது. இதன் விலை 10,999.99 அமெரிக்க டாலர்களாகும். இந்த டிவியின் எடை 141 பவுண்டுகளாகும். இந்த ஆக்குவோஸ் டிவி ஒரு முழுமையான எச்டி வசதியைக் கொண்டது. அதோடு இரண்டு 3டி கண்ணாடிகளையும் கொண்டிருக்கிறது. மேலும் இந்த டிவி இணையதள இணைப்பு வசதியும் கொண்டிருக்கிறது. இந்த டிவியின் மூலம் குடும்ப உறுப்பினர்களை ஒருங்கிணைக்கலாம் என்று டிவி ஆய்வாளர் அவி க்ரீன்கார்ட் கூறுகிறார். ஏனெனில் பெரிய டிவி இருக்கும் போது அதில் நிகழ்ச்சிகளைப் பார்க்க குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக வருவார்கள் என்று கூறுகிறார். அதன் மூலம் அவர்களுக்கு உறவு நெருக்கம் அதிகரிக்கும் என்றும் நம்புகிறார்.
திங்கள், 25 ஜூன், 2012
வருகிறது எட்டடி நீளத் தொலைக்காட்சிப் பெட்டி

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக