யாழில் 44 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் ஏதிலி வாழ்க்கை!
யாழ்.குடாநாட்ட்டில்
மட்டும் 44 ஆயிரத்து 559 பேர் தொடர்ந்தும் அகதி வாழ்க்கையை வாழ்ந்து
வருவதாக இடம்பெயர்ந்தோர் நலன்புரி அமைப்புக்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இவர்கள் அனைவரும் 12 ஆயிரத்து 459
குடும்பங்களை சேர்ந்தவர்களாவர். இவர்களில் பெரும்பாலானோர் 53 நலன்புரி
நிலையங்களினிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
இவர்களுள் பலரும் அடைக்கலம் புகுந்திருந்த ரயில் நிலைய கட்டடங்களிலிருந்து
ரயில் வரப்போவதாக கூறி வெளியேற்றப்பட்டு நடுவீதியில் விடப்பட்டுள்ளதாகவும்
இடம்பெயர்ந்தோர் நலன்புரி அமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
குறிப்பாக உயர்பாதுகாப்பு வலயமாக
தொடர்ந்தும் பேணப்பட்டுவரும் வலிகாமம் வடக்கில் மட்டும் மீளக்குடியமர
விண்ணப்பித்து விட்டு சுமார் 9 ஆயிரத்து 904 குடும்பங்களை சேர்ந்த
31ஆயிரத்து 524 பேர் காத்திருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிததன.
45 கிராமசேவையாளர் பிரிவுகளை கொண்ட
வலிகாமம் வடக்கு பகுதியினில் 2;0 பிரிவுகளினேயே இது வரை மக்கள் மீளக்குடியர
அனுமதிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 25 கிராம சேவையாளர் பிரிவுகளில் ஒன்பதில்
மட்டும் பகுதியாக மக்கள் மீளக குடியமர்த்தப்பட்டுள்ளனர். மற்றைய 16 கிராம
சேவையாளர் பகுதிகளில் மக்கள் மீள்குடியமர்வு பற்றி பாதுகாப்பு தரப்பு மௌனம்
காத்தே வருகின்றது.
எனினும் அரச தரப்போ வடக்கில் மக்கள்
முழுமையாக மீள்குடியமர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் வவுனியா மெனிக் முகாம்
பகுதிகளிலுள்ள மக்கள் மட்டுமே சொந்த இடங்களுக்கு திரும்ப வேண்டியிருப்பதாக
கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக