புதன், 30 மே, 2012

எழுத்தாளர் சோலை காலமானார்

எழுத்தாளர் சோலை காலமானார்


Last Updated : 29 May 2012 10:13:32 PM IST

சென்னை, மே 29: எழுத்தாளரும் பத்திரிகையாளருமான சோலை செவ்வாய்க்கிழமை இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 81.உடல்நலக் குறைவால் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனளிக்காமல் மோசமான நிலையில், வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். செவ்வாய்க் கிழமை மாலை வீட்டில் அவரது உயிர் பிரிந்தது.கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். பின்னாளில், எம்.ஜி.ஆரின் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு அரசியல் உதவியாளராகவும் இருந்தார். திமுக தலைவர் கருணாநிதியுடனும் நெருக்கம் கொண்டிருந்தார். அரசியல் விமர்சனக் கட்டுரைகள் அதிகம் எழுதிய சோலை, திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் பிறந்தவர்.சோலையின் உடல் அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. புதன் கிழமை குரோம்பேட்டை மின் மயானத்தில் அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.முகவரி: 9, தொல்காப்பியர் தெரு,  சீனிவாச நகர், பெருங்களத்தூர், சென்னை - 600063

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக