செவ்வாய், 29 மே, 2012

சூலை 9- ஆம் நாள் இணையதளம் முடக்கப்படலாம்: கூகுள் எச்சரிக்கை



சூலை 9- ஆம்  நாள் இணையதளம் முடக்கப்படலாம்: கூகுள் எச்சரிக்கை



வாஷிங்டன், மே.28: கம்ப்யூட்டர் வைரஸ் காரணமாக ஜூலை மாதத்தில் இணையதளத்தை தொடர்புகொள்ள முடியாமல் போகலாம் என்று கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட கம்யூட்டர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மோசடியாக ஆன்லைன் விளம்பரம் ஒன்றை ஹேக்கர்கள் ஓடவிட்டதைத் தொடர்ந்து இந்த பிரச்னை தொடங்கியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்காக இணையதள குறுக்கீடுகளைத் தடுக்க அரசு கம்ப்யூட்டர்களை பயன்படுத்துவதற்கு சில மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு வளையம் ஒன்றை எஃப்பிஐ அமைத்தது. ஆனால் அந்த அமைப்பு ஜூலை 9ஜம் தேதி மூடப்பட உள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இணையதள சேவை கிடைக்காது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.எஃப்பிஐ சில மாதங்களாகவே விளம்பரம் ஒன்றை வெளியிட்டு வந்தது. அதில் ஒரு வெப்சைட்டை பார்க்குமாறும், அதைப்பார்த்தால்தான் தங்கள் கம்ப்யூட்டர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவந்தும் என்று கூறியிருந்தது. மேலும் அவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால் பிரச்னையை எப்படிக் கையாள்வது என்றும் தெரிவித்திருந்தது.அவ்வாறு வைரஸால் பாதிப்புக்கு உள்ளான கம்ப்யூட்டர்கள் ஜூலை 9-ம் தேதிக்குப் பின்னர் இணையதளத்தை தொடர்புகொள்ள முடியாது என்று தற்போது எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக