புதன், 30 மே, 2012

தொந்தரவு செய்யாதீர்கள்

சொல்கிறார்கள்
"டார்ச்சர்'பண்ணாதீங்க!


இசைப்பள்ளியை நடத்தி வரும் பாலாம்பாள் ராமகிருஷ்ணன்: இன்று மாணவர்கள், தங்கள் வகுப்பு ஆசிரியரையே, குத்திக் கொலை செய்யும் விபரீதங்கள் அரங்கேறுவதைப் பார்க்கிறோம்; அந்தளவிற்கு மன அழுத்தம். இதற்குக் காரணம், எந்த நேரமும், பசங்களைப் "படி படி' என்று தொடர்ந்து, "டார்ச்சர்' செய்வது தான். படிக்கவில்லை என்றால், எதுவும் பண்ண முடியாது; அதே சமயம், படிப்பது மட்டுமே நோக்கமாக இருந்தாலும் ஆபத்து தான்.மாணவர்களுக்கு, வாரத்தில் இரண்டு, மூன்று நாள், விளையாட்டிற்கான வகுப்பு இருப்பது போல், இசை, நடனம் என, வேறு வகுப்புகளும் இருக்க வேண்டும். திருவான்மியூரிலும், அடையாரிலும் எங்களின் இசைப் பள்ளி உள்ளது. நான் வாய்ப்பாட்டு மட்டும் கற்றுக் கொடுக்கிறேன். தவிர, கீ-போர்டு, வயலின் வகுப்புகளும் உண்டு.எங்களிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள், நிறையப் பேர் இப்போது, பல சபாக்களில் பஜனை செய்கின்றனர். மற்ற பகுதிகளில் உள்ள இசைப் பள்ளிகளில், ஆர்வமாக உள்ளவர்களை ஊக்குவித்து, பஜனைக்கு தயார் செய்யும் பணியையும், எங்கள் இசைப் பள்ளி செய்கிறது.சமீப காலமாக, ஆன்-லைனிலும் இசை வகுப்பு எடுக்கிறேன்; வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு இது பயன்படுகிறது.இசை என்பது கடல் போன்றது; அதை ஒரே நாளிலேயோ அல்லது ஒரே ஆண்டிலேயோ கற்று அரங்கேற்ற வேண்டும் என, அவசரப்படுகின்றனர். அது தவறான அணுகுமுறை. எங்களிடம் இப்போது, 70 பேர் வரை, இசைப் பள்ளிக்கு வருகின்றனர். 10 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறவர்களும் உண்டு.இசை ஆர்வம் உண்டு, ஆனால், பணம் கட்டி கற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு, இலவசமாக வகுப்புகள் எடுக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக