ஞாயிறு, 15 ஜனவரி, 2012

Reasons for the failure in B.E. second year

தவறான புள்ளி விவரத்தைத் தருகிறார். இவர் கருத்துப்படி ௭௫ விழுக்காட்டு மாணவர்கள் தொழில்நுட்பப்பயிலகத்தில் இருந்து படிக்க வந்தவர்கள் என்ற தவறான கருத்து வெளிப்படுகிறது. உண்மையான காரணங்களை அறிந்து அவற்றைக் களைய நடவடிக்கை எடுக்காமல் கல்வித்தரத்திற்குப் பிறர் மீது பழி போடுவது அழகல்ல.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழாவிழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக்  காப்போம்! /



சென்னை:சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலையின் கீழ் உள்ள, 170 பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டில், 75 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. ஏதாவது ஒரு பாடத்தில் அவர்கள் தோல்வியடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது, உயர் கல்வி வட்டாரத்தில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலையின் கீழ், 170 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், 70 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இரண்டாம் ஆண்டு பொறியியல் தேர்வு முடிவுகள், அண்மையில் வெளியிடப்பட்டன. இதில், 75 சதவீத மாணவர்கள், ஏதாவது ஒரு பாடத்தில் தோல்வியடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

துணைவேந்தர் தங்கராஜ் கூறியதாவது:பாலிடெக்னிக் படித்து, இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்தவர்களின் கற்கும் திறன் குறைவாக இருப்பதே, இதற்கு காரணம். 12ம் வகுப்பு கணிதப் பாடங்களை படிக்காமல், பாலிடெக்னிக் படித்து நேரடியாக பொறியியல் இரண்டாம் ஆண்டில் சேருவதால், அவர்களால், இங்குள்ள கணித பாடங்களை படிக்க முடியவில்லை. மேலும், பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள், ஜூனில் வெளிவருவதால், அவர்கள் ஒரு மாதம் தாமதமாகவே, வகுப்புகளுக்கு வருகின்றனர். பொறியியல் கல்லூரியும் அவர்களுக்கு புதிது. அதனால் தான் அவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.இவ்வாறு தங்கராஜ் கூறினார்.

கான்பூர் ஐ.ஐ.டி., ஆட்சிமன்ற குழு தலைவர் ஆனந்தகிருஷ்ணன் தேசிய தொழில் கல்வி ஆசிரியர் பயிற்சி மையத்தில் பேசும்போது, ""கல்லூரிகளில் உரிய கல்வி தகுதி கொண்ட ஆசிரியர்கள் இல்லை. தனியார் கல்லூரி நிர்வாகம் அதிக கட்டணம் வசூலித்தாலும், தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்வதில்லை. இதையெல்லாம் ஒழுங்குபடுத்தும் வகையில், புதிய அங்கீகார மசோதா அமையும்,'' என்றார்.

அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தரும், மாநில திட்டக் குழு (கல்வி) உறுப்பினருமான பாலகுருசாமி கூறியதாவது: பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான, தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டது, தனியார் பொறியியல் கல்லூரிகளில் தகுதி குறைந்த ஆசிரியர்கள் பணிபுரிவது, கல்வியின் தரம் குறித்து, கவலைப்படாத கல்லூரி நிர்வாகம் ஆகியவையே தேர்ச்சி குறைந்ததற்கு காரணம். தற்போதுள்ள ஆசிரியர்களில், 50 சதவீத ஆசிரியர்கள் தகுதி குறைந்தவர்கள். பல கல்லூரிகள் அனுபவம் வாய்ந்த, மூத்த ஆசிரியர்கள் கிடையாது. இதெல்லாம், மாணவர்களின் தேர்ச்சி குறைந்ததற்கு காரணம். இவ்வாறு பாலகுருசாமி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக