புதன், 18 ஜனவரி, 2012

உள்ளாடை தூய்மை

உள்ளாடை தூய்மை

First Published : 15 Jan 2012 12:00:00 AM IST


* உள்ளாடைகள் தன் மிருதுத்தன்மையை இழந்து, சொரசொரப்பாக மாறும்வரை சிலர் உபயோகிக்கின்றனர். உள்ளேதானே போடுகிறோம். கிழிந்திருந்தாலோ, சாயம் போனதாக இருந்தாலோ யார் பார்க்கப் போகிறார்கள் என அலட்சியம் செய்யாமல், குறிப்பிட்ட மாத இடைவெளியில் உள்ளாடைகளைப் புதிதாக மாற்றிவிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.* நமக்கு ஏற்ற அளவிலான உள்ளாடைகளில் கவனம் தேவை. சாதாரணமான நிலையில் மட்டுமல்லாது, உட்காரும்போதும், உள்ளாடைகள் சற்று தளர்வாகத்தான் இருக்க வேண்டும். மிகவும் இறுக்கமான எலாஸ்டிக் தோலில் அலர்ஜியை ஏற்படுத்தும்.* இப்போது விதவிதமான கலர் மற்றும் சின்தடிக் வகை உள்ளாடைகள் ஏராளம் கிடைக்கின்றன. ஆனால்அவற்றை உபயோகிக்கும்போது கவனம் தேவை. உள்ளாடைகள் காட்டன் துணியிலானதாகவும், மிருதுவானதாகவும் இருப்பது நல்லது.* உள்ளாடைகளை சற்று வெயில்படும்படி உலர்த்துவது நல்லது. உள்ளாடைகளை எப்போதும் நன்கு உலர்ந்த பிறகே அணிய வேண்டும். சற்று ஈரமான நிலையில் அணிந்தால் பூஞ்சைத் தொற்று ஏற்படும்.* உள்ளாடைகளை வாஷிங்மெஷினில் துவைப்பவர்கள், மெஷினில் இருந்து எடுத்த பிறகு, குறைந்தது மூன்று முறையாவது சுத்தமான தண்ணீரில் அலச வேண்டும்.* அதிக சோப் பொடியில் ஊற வைத்து துவைக்கும்போது ஐந்து அல்லது ஆறு முறை நன்கு அலச வேண்டும்.* சூடான தண்ணீரில் குறைந்த அளவு சோப் பொடி போட்டு, பத்து நிமிடங்கள் ஊற வைத்து, துவைத்து, நன்கு அலசுவதே சிறந்தது.* பெண்கள் உள்பாவாடைகளைத் துவைக்கும்போது உள்பக்கமாக மாற்றி எடுத்து நன்கு பிரஷ் செய்து அலச வேண்டும். ஆண்களின் உள்பனியனுக்கும் இதே முறையைப் பின்பற்ற வேண்டும்.* வெளியூர், சுற்றுலா செல்லும்போது கழிவறையில் உபயோகிப்பதற்கு வைத்திருக்கும் தண்ணீர் முற்றிலும் பாதுகாப்பானதுதானா என உறுதி செய்துவிட்டு உபயோகித்தால், பல சிக்கல்களிலிருந்தும் தப்பித்துவிடலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக