விருதாளர்கள அனைவருக்கும் வாழ்த்துகள். பாராட்டுகள்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
சென்னை: தமிழறிஞர்களுக்கான தமிழக அரசின் விருதுகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதன்படி, திருவள்ளுவர் விருது புலவர் செ. வரதராஜனுக்கும், தந்தை பெரியார் விருது விசாலாட்சி நெடுஞ்செழியனுக்கும் வழங்கப்படுகிறது. அம்பேத்கர் விருது பேராசியர் சு. காளியப்பனுக்கும், அண்ணா விருது இரா. செழியனுக்கும், பாரதியார் விருது முனைவர் பிரேமாவுக்கும், காமராஜர் விருது திண்டிவனம் ராமமூர்த்திக்கும், பாரதிதாசன் விருது ஏர்வாடி சு. ராதாகிருஷ்ணனுக்கும், கி.ஆ.பெ., விஸ்வநாதன் விருது இரா. மோகனுக்கும், திரு. வி.க. விருது ரா. செயப்பிரகாசுவுக்கும் வழங்கப்படுகிறது. இவ்விருதுகள் சென்னையில் வரும் 16ம் தேதி நடக்கும் விழாவில் வழங்கப்படவுள்ளது. ஒரு லட்சம் ரொக்கப்பரிசும், ஒரு சவரன் தங்க பதக்கமும் கொண்டது இவ்விருதுகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக