அனைத்துக்கட்சி என்னும் பொழுது பேராயக்கட்சியாகிய காங்கிரசே குற்றவாளியாக உள்ளதால் அக்கட்சியில் உள்ள உறுப்பினர்கள் - குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும - கட்சிக்கு எதிராக ஒன்று சேர்வதா என எண்ணக்கூடாது. இன நலன் கருதி, மக்கள் நலன் கருதி, நாட்டு நலன் கருதி, மனித நேயம் கருதிப் போராட வேண்டும். குறைந்தது தனி மேடைகளிலாவது இனப்படுகொலையாளிகள் அனைவரையும் கூண்டிலேற்றித் தண்டிக்கப் போராட வேண்டும்.
பிற கட்சிகளில் உள்ளவர்களும் தலைமைக்குக் கொத்தடிமைகளாக இல்லாமல் மனச் சான்றுடன் செயல்பட்டு மீனவர் படுகொலைகள் நிற்க, தமிழர் நலன் காக்க, தமிழ் ஈழம் மலர ஒன்றுபடவேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
பிற கட்சிகளில் உள்ளவர்களும் தலைமைக்குக் கொத்தடிமைகளாக இல்லாமல் மனச் சான்றுடன் செயல்பட்டு மீனவர் படுகொலைகள் நிற்க, தமிழர் நலன் காக்க, தமிழ் ஈழம் மலர ஒன்றுபடவேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
ராஜபட்சவை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற கட்சி பாகுபாடின்றி ஒன்று சேர வேண்டும்: பழ. நெடுமாறன், வைகோ, தா. பாண்டியன் அழைப்பு
First Published : 26 Apr 2011 05:03:37 AM IST
இலங்கை அதிபர் ராஜபட்சவை ஐ.நா சபை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி, சென்னையில் திங்கள்கிழமை மதிமுக பொதுச்செயலர் வைகோ தலைமையில் நட
சென்னை, ஏப். 25: இலங்கைத் தமிழர்களைப் படுகொலை செய்த ராஜபட்சவை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற தமிழக மக்கள் அனைவரும் கட்சி பாகுபாடின்றி ஒன்று சேர வேண்டும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் அழைப்பு விடுத்தனர். இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்த ராஜபட்சவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தி, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட மேடையில் ராஜபட்ச போன்று ஒருவருக்கு உடை, முகமூடி அணிவிக்கப்பட்டு, மேடையில் அமைக்கப்பட்டிருந்த குற்றவாளிக் கூண்டில் கைவிலங்குடன் நிறுத்தப்பட்டு, வைகோவால் தூக்கில் ஏற்றப்படுவது போன்று நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற தலைவர்கள் பேசியதாவது: பழ. நெடுமாறன்: உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் இடைவிடாத போராட்டத்துக்கு இப்போது ஒரு உருவம் கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையைக் கூட இலங்கைக்குள் அனுமதிக்காத தைரியம் ராஜபட்சவுக்கு உண்டு. முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இருந்து தப்பி வந்த தமிழர்களிடம் சாட்சியம் திரட்டி பதிவு செய்ய முயன்றோம். ஆனால் இதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. க்யூ பிராஞ்ச் போலீûஸ வைத்து மிரட்டி சாட்சியம் பெற முடியாமால் தடுத்தார். இலங்கைக்குள் ஐக்கிய நாடுகள் சபையை அனுமதிக்காத ராஜபட்ச, இப்போது ஐக்கிய நாடுகளுக்கு எதிராக மே 1-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த சிங்களவர்களை தூண்டி வருகிறார். இவர் லண்டன் சென்ற போது அவரை போர்க் குற்றவாளி எனக்கூறி அங்குள்ள அமைச்சர்கள் அவரைச் சந்திக்க மறுத்ததுடன் அங்கிருந்து திருப்பி அனுப்பினர். இதைத் தொடர்ந்து மற்ற நாடுகளும் இதை பின்பற்றின. போர்க் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பது உலகம் ஏற்றுக் கொண்ட ஒன்று. ஐக்கிய நாடுகள் சபை இப்போது எவ்வாறு முடிவெடுக்கப் போகிறது என்பதுதான் முக்கியம். ராஜபட்ச மீது விசாரணை இல்லாமல் தடுக்க இந்தியா உதவி செய்யும். இதை முறியடிக்க தமிழகத்தில் 6.5 கோடி தமிழர்களும் ஒன்று சேர்ந்து ராஜபட்ச போர்க் குற்றவாளி என்பதை உலகுக்கு உணர்த்த வேண்டும். வைகோ: இலங்கைத் தமிழர்களுக்காக முத்துக்குமரனில் இருந்து சமீபத்தில் கிருஷ்ணமூர்த்தி வரை தீக்குளித்து இறந்துள்ளனர். இதைப் பேசி, நாங்கள் தீக்குளிப்பதை ஊக்குவிக்கிறோம் என்று யாரும் நினைக்க வேண்டாம். இளைஞர்கள் தீக்குளிக்கும் முடிவுக்கு செல்லக் கூடாது. அனைவரையும் போராட்டக் களத்துக்கு கொண்டுவரும் பணியில் அவர்கள் ஈடுபட வேண்டும். அப்போதுதான் ராஜபட்சவுக்கு தண்டனை பெற்றுத்தர முடியும். முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர் தீக்குளித்த சம்பவத்துக்கு தமிழக முதல்வர் ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. இதே போல்தான் மற்றொரு கட்சியின் பொதுச் செயலரும் இரங்கல் தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது விடுதலைப் புலிகள் குறித்து பேசாமல் தமிழகத்தில் அரசியல் நடத்த முடியாது என்று தெரிந்து கொண்டவர்கள் இலங்கைத் தமிழர்கள் குறித்து பேசிவருகின்றனர். விடுதலைப் புலிகள் குறித்து விமர்சனம் செய்ய எந்த அரசியல் கட்சிக்கும் உரிமை இல்லை. வைகோ எந்தக் கூட்டணியில் இருந்தாலும் விடுதலைப் புலிகள் ஆதரவுக் கொள்கையில் இருந்து விலகப்போவதில்லை. அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் எனது நிலைப்பாடு இதுதான். அடக்குமுறையைக் கண்டு அஞ்சப்போவதில்லை. தமிழீழம் மலர, ராஜபட்சவை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற, தமிழக மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்த வேண்டும். தா. பாண்டியன்: நாம் நடத்தும் போராட்டம் இன்றுடன் முடிந்துவிடுவதில்லை. இந்தப் போராட்டம் தொடரும். இலங்கைத் தமிழர்களுக்காக நாம் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி, இப்போது உலக நாடுகள் பார்வைக்குச் சென்றுள்ளது. இதனால் ஐக்கியநாடுகள் சபையும் ராஜபட்சவை போர்க் குற்றவாளி என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கையில் போர் நடந்தபோது சர்வதேச பத்திரிக்கையாளர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் கேமராவுக்கு அனுமதி அளிக்கவில்லை. செஞ்சிலுவைச் சங்கத்தைக் கூட அங்கு அனுமதிக்கவில்லை. ஆனால் அதையும் மீறி இலங்கை ராணுவத்தால், இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இப்போது சாட்சியமாக வந்துள்ளது. இதுவரை நாம் போராடிய போராட்டத்துக்கு மேலும் வலு சேர்க்க இந்தியா முழுவதும் அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி போராட நாம் தயாராக வேண்டும். அப்போதுதான் ராஜபட்சவுக்கு தண்டனை பெற்றுத் தரமுடியும். புதிய பார்வை ஆசிரியர் ம. நடராஜன், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்பட நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக