தேசியத் தந்தை வேலுப்பிள்ளை அவர்களின் மறைவிற்கோ தேசிய அன்னை பார்வதி அம்மாள் மறைவிற்கோ இரங்கல் தெரிவித்தால் ஆட்சி இருக்காதோ?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
கனிமொழி மீது குற்றப்பத்திரிகை: சட்டப்படி நடவடிக்கை: திமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு
First Published : 28 Apr 2011 02:00:55 AM IST
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற திமுக உயர் நிலை செயல் திட்டக் குழு கூட்டத்துக்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி, பொதுச் செய
சென்னை, ஏப். 27: 2ஜி அலைக்கற்றை வழக்கில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், உண்மையை நிலைநாட்ட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் துணைக் குற்றப்பத்திரிகை தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மாநிலங்களவை திமுக உறுப்பினரும் முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி மீது கூட்டுசதியாளர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வரும் மே 6-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கனிமொழிக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.இந்த நிலையில் 2ஜி அலைக்கற்றை வழக்கு விவகாரம் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:2ஜி அலைக்கற்றை வழங்கியதில் பின்பற்றப்பட்ட நடைமுறையால் அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டின் மீது சிபிஐ விசாரணை தொடங்கப்பட்டு அது தொடர்பாக தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக பல்வேறு நிறுவனங்களின் இயக்குநர்களையும் கைது செய்துள்ள நிலையில் அவற்றில் ஒரு நிறுவனத்திடமிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்காக ரூ. 200 கோடி கடன் பெறப்பட்டு பின்னர் வட்டியுடன் திரும்பச் செலுத்தியுள்ள விவரத்தை வருமான வரித் துறையிடம் சான்று ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் பங்குதாரரான மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியையும் இயக்குநர் சரத் குமாரையும் இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த இரண்டாவது குற்றப் பத்திரிகையில் சேர்த்திருக்கும் செய்தி இந்த குழுவை வியப்பில் ஆழ்த்துகிறது.2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான குற்றச்சாட்டுகள் வெளிவரத் தொடங்கியதிலிருந்தே எப்படியாவது திமுக தலைமை மீது பழி சுமத்துவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பாகக் கருதி, இதை ஒரு அரசியல் பிரச்னையாக்கி மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியினரிடையே அவநம்பிக்கையை உருவாக்கவும் பிரச்னையைப் பெரிதுபடுத்தி மாறுபாடுகளை வளர்த்து கூட்டணியை உடைக்கும் நோக்கத்துடனும் சில அரசியல் தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர். அதுபோல் முதல்வர் கருணாநிதியை அரசியல் தலைமையில் இருந்து வீழ்த்திவிட வேண்டும் என்னும் அபிலாஷை கொண்டு அலையும் பத்திரிகைகளும் இந்தச் செய்தியை மூலதனமாகக் கொண்டு கட்சிக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி, அதைக் கலகலக்கச் செய்யலாம் என்னும் உள்நோக்கத்துடன் பலவகையிலும் செயல்பட்டு வருகின்றன.அப்படிப்பட்ட ஒரு பிரசார மாயைக்கு திமுக இரையாகாது. 2ஜி அலைக்கற்றை வழக்கில் உண்மையை நிலைநாட்ட முடியும் என்று நம்புவதுடன், அதற்குரிய சட்டப்படியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.இலங்கைப் பிரச்னை:இலங்கைப் போர்க் குற்றங்கள் பற்றி ஐ.நா. குழு பரிந்துரைத்துள்ளவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இந்தக் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும்.மேலும் இது தொடர்பாக தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தோழமைக் கட்சியினருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.சாய்பாபாவுக்கு இரங்கல்:வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் புட்டபர்த்தி சத்ய சாய்பாபா மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலே தெரிவிக்கப்பட்ட கருத்து தினமணியில் வெளியிடப்படவில்லை. வாழ்க அதன் நடுவுநிலைமை!
பதிலளிநீக்கு