செவ்வாய், 26 ஏப்ரல், 2011

Dog or Foz? நாய் நரியானது; இளைஞர் கைது

இதற்கெல்லாம் தளையிடாமலே (கைது செய்யாமலே) நடவடிக்கை எடுக்கலாம்.  அல்லது  சொந்தப் பொறுப்பில் பிணையில் விட்டிருக்கலாம். அறியாமையில் அதே நேரம் உயிர் நேயத்தில் செய்த செயல் என்றால் அறிவுறுத்தி விட்டுவிடலாம்.அல்லது முறையான இசைவை வழங்கியிருக்கலாம். என்ன சட்மோ! என்ன  நடைமுறையோ!  கொலையாளிகளை விட்டுவிடுகிறார்கள். இனப்படுகொலை செய்பவர்களுக்குச் செங்கம்பள விரிப்பில் வரவேற்பு
கொடுக்கிறார்கள். அப்பாவிகளைத் துன்புறுத்துகிறார்கள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 





நாய் நரியானது; இளைஞர் கைது

First Published : 26 Apr 2011 05:45:13 AM IST


திருச்செங்கோடு, ஏப். 25: நாய்க்குட்டி என நினைத்து பிடித்து வந்து, 9 மாதங்களாக நரியை வளர்த்து வந்த இளைஞரை வனத்துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். நரி மீட்கப்பட்டது.  திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம், கீழமுகத்தைச் சேர்ந்தவர் மாதேஸ் (28). விசைத்தறி தொழிலாளி. இவர் தனது வீட்டில் நரி வளர்ப்பதாக நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ஆஸிஸ்குமார் ஸ்ரீவத்சவாவுக்கு தகவல் கிடைத்தது.  அவரது உத்தரவின்பேரில், ராசிபுரம் வனச்சரகர் மதியழகன், வனவர் ராமச்சந்திரன் மற்றும் வனக் காவலர்கள் ஞாயிற்றுக்கிழமை மாதேஸ் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, அவர் நரி வளர்த்து வந்தது தெரியவந்தது.  வனப்பாதுகாப்புச் சட்டம் அட்டவணை 2-ன் படி அரசு அனுமதி இன்றி வன விலங்குகளை வீட்டில் வளர்ப்பது குற்றம் என்பதால் மாதேûஸ வனத்துறையினர் கைது செய்தனர். அவர் வளர்த்து வந்த நரி மீட்கப்பட்டு, திங்கள்கிழமை திருச்செங்கோடு குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆபிரஹாம் லிங்கன் முன் ஆஜர்படுத்தப்பட்டது.  கைது செய்யப்பட்ட மாதேஸ் தரப்பில் கூறப்படுவது:  9 மாதங்களுக்கு முன் ஏரிக்கரையோரம் சென்ற மாதேஸ், குட்டியாக இருந்த நரியை நாய்க்குட்டி என நினைத்து வீட்டுக்குக் கொண்டு வந்தார். அதற்கு பால், பழம், பிஸ்கட் கொடுத்து வளர்த்தார்.  சில மாதங்களுக்குப் பிறகு அதன் உடலில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு அது நாயல்ல, நரி என்பதைத் தெரிந்து கொண்டார். பின்னர் நரியை வீட்டில் இருந்து பலமுறை ஏரிக்கரையோரம் உள்ள வனப்பகுதிக்கு விரட்டினார். ஆனால் அது மீண்டும் மீண்டும் மாதேஸ் வீட்டுக்கே வந்து விட்டது.  வீட்டில் உள்ள குழந்தைகள், மற்றவர்களுக்கு அது எந்தத் தொந்தரவையும் தரவில்லை. பிஸ்கட், பால், நண்டு, கருவாடு ஆகியவற்றைச் சாப்பிட்டு வந்தது. அது வளர்ந்த பின்பும்கூட அது நாய்க்குட்டி போலவே இருந்தது என்றனர்.  வனத்துறையினர் காயம்: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மாருதி ஆம்னி வேனில் கொண்டுவரப்பட்ட நரி வனத்துறையினர் சிலரைக் கடித்துக் காயப்படுத்தியது. இது சாதாரண காட்டு நரிதான். நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன், நரி கொல்லிமலை காட்டில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக