செம்மொழி விருதுகள் மே 6 அன்று குடியரசுத் தலைவர் வழங்குகிறார் ஆனால், விழா ஏற்பாட்டுத்தகுதி தமிழ் நிறுவனத்திற்கு இல்லையாம்!
ஒரு வழியாக வரும் மே 6 அன்று முற்பகல் 11.00 மணிக்குச் செம்மொழித்தமிழுக்கான விருதுகளைக் குடியரசுத்தலைவர் குடியரசுத்தலைவர் மாளிகையில் வழங்குகிறார். அத்துடன் பிற மொழிகளுக்கு உரிய செம்மொழி விருதுகளையும் வழங்குகிறார்.
தமிழுக்கு முதல் தடவையாக வழங்கப்படுகின்ற விருதுகள் என்பதால் இதனைத் தனியாக முதன்மை கொடுத்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அவ்வாறு செய்ய வில்லை. மேலும் விழா ஏற்பாடுகள் தேசியச் சமசுகிருத சன்மான் (இராசுட்டிரிய சமசுகிருத சன்மான்) என்னும் அமைப்பின் மூலமே மேற்கொள்ளப்படுகின்றன. குறைந்தது செம்மொழித் தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் மூலம் விழா ஏற்பாடுகளைச் செய்தாலாவது தமிழ் விருதாளர்களுக்கு உண்மையான சிறப்பு கிடைக்கும்.
அவ்வாறு செய்தவற்குத் தமிழக அரசும் செம்மொழித் தமிழ் ஆய்வு மத்தியநிறுவனமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுகளை உடனே வழங்க வேண்டியதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்திய மாலைமுரசு நாளிதழுக்கும் நட்பூ இணைய இதழுக்கும் நம் நன்றியும் பாராட்டும் என்றும் உரியது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
–
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக