திங்கள், 25 ஏப்ரல், 2011

announcement of exam.result dates - minister opposed: + 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு தேதி அறிவிப்புக்கு அமைச்சர் எதிர்ப்பு

தேர்வுத்தாள் திருத்தம், மதிப்பெண் பதிதல் முதலான அனைத்துப் பணிகளும் முடிந்த பின் தேர்வுத்துறை  இய்க்குநரே தேர்வு முடிவு வெளிவரும் நாளை அறிவிக்கலாம். எனினும் மரியாதை கருதி அரசு செயலர் மூலம் அறிவிக்கலாம். முதலிடம் பெறுபவர்களுக்கு அரசு  பரிசுகள் தருவதால் அமைச்சர் மூலம் தெரிவிக்கும் வழக்கம் வந்திருக்கலாம். அந்த வழக்கம் வந்த பின்பு அதை மாற்ற வேண்டிய தேவை இல்லை. சரி, அதை மாற்றுகிறார்களா? அப்பொழுது என்ன செய்யலாம்? ௧. அறிவித்துள்ளதால் வேறு ஒன்றும் சிக்கல் இல்லாக் காரணத்தால், பெருந்தன்மையாகக் கண்டுகொள்ளாமல் இருக்கலாம. அல்லது ௨. இடைக்கால  அரசின் முதல்வராக முதல்வர் மட்டும் பொறுப்பில்  இருக்க மற்ற அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு விலகலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


 

+ 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு தேதி அறிவிப்புக்கு அமைச்சர் எதிர்ப்பு

சென்னை, ஏப். 24: பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டதற்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் முறையே மே 14, 25 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை செயலர் டி.சபிதா அறிவித்தார். இந்த அறிவிப்பு அரசைக் கலந்து ஆலோசிக்காமல் பள்ளிக் கல்வித் துறையே தன்னிச்சையாக அறிவித்துள்ளதாக அந்தத் துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.  இதுகுறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய அவர், ""தேர்வு முடிவு தேதிகளை அறிவிப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரிகள், அதன் அமைச்சரைக் கலந்து ஆலோசித்து விட்டு முதல்வரின் ஒப்புதலைப் பெறுவர். அவர் அனுமதி அளித்த பிறகு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மூலமாக தேர்வு முடிவு தேதி அறிவிக்கப்படும். இதுவே வழக்கமான நடைமுறை. ஆனால், இதற்கு மாறாக, பள்ளிக் கல்வித் துறை செயலரே தேர்வு முடிவு தேதியை அறிவித்துள்ளார். இந்த விஷயத்தில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது. தேர்தல் தேதி முடிவு அறிவிப்புக்கும், தேர்தல் நடத்தை நெறிமுறைகளுக்கும் தொடர்பில்லை'' என்று தெரிவித்தார்.  தொடரும் மோதல்: நடத்தை நெறிமுறைகளால் மக்கள் நலப் பணிகள் தடைபடுவதாக முதல்வர் கருணாநிதி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, நலத் திட்டப் பணிகளை அமைச்சர்கள் பார்வையிடவும், அரசு வாகனங்களைப் பயன்படுத்தவும் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது. இந்த நிலையில், பள்ளித் தேர்வு முடிவு தேதியை தங்களை கலந்து ஆலோசிக்காமல் பள்ளிக் கல்வித் துறை தன்னிச்சையாக அறிவித்துள்ளது என்ற அந்தத் துறை அமைச்சரின் திடீர் புகாரால் கல்வித் துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள்

அப்படி அமைச்சர்கள் நிர்வாகம்? முயுமைகைய தி மு க ஆளுமை இயந்து விட்டது. அமைச்சர் தனக்கு தேவையானவர்கள் தேர்ச்சி பெற முயலுகிறார் பேலும்
By Mahesh
4/25/2011 8:35:00 AM
அதிகாரிகள் அவர்களே அடுத்து dmk ஆட்சி அமைக்க போகுது உங்களக்கு இருக்கு ஆப்பு minister thangam thenarasu கே வ (education department ) இதை நான் நடுநிலை வாதியாக சொல்றேன்
By uthai
4/25/2011 7:49:00 AM
அதிகாரிகள் அவர்களே அடுத்து dmk ஆட்சி அமைக்க போகுது உங்களக்கு இருக்கு ஆப்பு minister thangam thenarasu கே வ (education department ) இதை நான் நடுநிலை வாதியாக சொல்றேன்
By uthai
4/25/2011 7:35:00 AM
இந்தத் தங்கத்திற்கு என்னவாயிற்று?தேர்வு முடிவுகள் எப்போது வெளியிட்டாலும்- இவருக்கும் இவரது தலைவருக்கும் என்ன ஆயிற்று?
By இராமசாமி சேகர்
4/25/2011 7:32:00 AM
இவரும் ,தன்னுடைய தலைவனைப் போலவே பேச ஆரம்பித்து விட்டார் .என்னைக் கலந்து ஆலோசிக்கவில்லை,என்னை மதிக்கவில்லை என்று .அப்படியே அறிவித்ததினால் என்ன குடிமுழுகிவிட்டது . உன்னுடைய தலைவர் தான் ," கல்யாண வீட்டுக்குப் போனால் மாப்பிள்ளையாக இருப்பேன் ,இழவுவீட்டுக்குப் போனால் பிணமாக இருப்பேன் " என்று ஆலாய்ப் பறப்பார் ,நீங்கள் எல்லோருமே அப்படியே இருக்கிறீர்களே !
By மூர்த்தி
4/25/2011 6:48:00 AM
இருந்தாலும் இப்படியெல்லாமா நடப்பது? தேர்தல் ஆணையம் படுத்தும் பாடு , பாவம், ரொம்ப டூ மச்!
By ஜெயராஜ் வி.சி.
4/25/2011 5:48:00 AM
மந்திரிகள் தான் அலுவலகத்துக்கு சென்று கோப்புகளை பார்த்து அனுமதிக்க வேண்டும். அவர்கள் தேர்தல் முடிந்த பிறகும் கோப்புகளை பார்த்ததாக தெரியவில்லை. வீணாக தேர்தல் கமிஷன் மேல் பழி போட தலைமை செயலகம் பக்கமே அமைச்சரவை எட்டி பாரக்க வில்லை!
By velumani
4/25/2011 5:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக