வெள்ளி, 22 ஜனவரி, 2010

தலையங்கம்:தமிழ்வழிக்கு ஒரு "வழி'இல்லை

First Published : 01 Jun 2009 12:22:00 AM IST

Last Updated : 05 Jun 2009 12:10:52 AM IST
http://74.125.153.132/search?q=cache:ERLxTCATkJUJ:www.dinamani.com/edition/estory.aspx%3FTitle%3D%253Cfont%2Bcolor%3D%2522red%2522%253E%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%253C/font%253E%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%2B%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%2B%2522%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%26artid%3DmBwVt0RSbZ0%3D%26SectionID%3DLDMxXdRemRo%3D%26MainSectionID%3DLDMxXdRemRo%3D%26SectionName%3DXQcp6iFoWTtlA6Ow0KrX2Q%3D%3D%26SEO%3D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&cd=1&hl=ta&ct=clnk&gl=in&client=firefox-a
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிடும்போது அரசுப் பள்ளித் தேர்வு முடிவுகள், மெட்ரிகுலேஷன் பள்ளி தேர்வு முடிவுகள் என தனித்தனியாகப் பிரித்து வெளியிடப்படுகிறது. ஆனால் பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வெளியிடும்போது, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துத்தான் வெளியிடுகின்றனர்.மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது, இதில் என்ன தவறு இருக்கிறது? என்று கேட்கத் தோன்றும். ஆனால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிக வேகமாகக் குறைந்துவரும் இன்றைய சூழலில், இதனை நுட்பமாகப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வெளியிடும்போது, தமிழை முதல் மொழிப்பாடமாக எடுத்துப் படித்து, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை மட்டுமே தமிழக அரசு மாநில, மாவட்ட அளவில் தரவரிசைப்படுத்துகிறது. அவர்களுக்குப் பாராட்டு மற்றும் ரொக்கப் பரிசு வழங்குகிறது. ஆனால், இந்த மாணவர்கள் தமிழ் வழியில் படித்தவர்களா என்றால், 99 சதவீதம் இல்லை என்று உறுதியாகச் சொல்லிவிடலாம். முதல் மொழிப்பாடம் மட்டுமே தமிழ். மற்ற பாடங்களுக்கான விடைகளை அவர்கள் ஆங்கிலத்தில்தான் எழுதுகிறார்கள்.இப்படியாக ஆங்கில வழிக் கல்வி பயின்று, தமிழை மொழிப்பாடமாக மட்டுமே படித்து, மாநில அளவில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களாகவே இருக்கிறார்கள். தமிழக அரசின் மாநில, மாவட்ட அளவிலான பாராட்டும் ரொக்கப் பரிசும் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்குத்தான் போய்க்கொண்டிருக்கிறது. தமிழ் வழியில் பாடம் நடத்தும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எந்தப் பாராட்டும் பரிசும் பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியானபோது, பெற்றோர்களிடம் எப்படி இங்கே மாணவர்களைச் சேர்க்க ஆர்வம் ஏற்படும்?பத்தாம் வகுப்பு தேர்வு முடிவைப் போலவே, பிளஸ்-2 தேர்வு முடிவுகளையும் ஒரேநாளில் ஆனால் அரசுப் பள்ளி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளித் தேர்வு முடிவுகளைத் தனியாக வெளியிட்டால் தமிழ்வழியில் பயின்ற மாணவர்கள் மற்றும் ஆங்கில வழியில், ஆனால் தமிழை முதல் பாடமாக எடுத்துப் பயின்ற மாணவர்கள் என்ற இரு தரவரிசை உருவாகும். இரண்டு தர வரிசை மாணவர்களுக்கும் அரசு விருது வழங்கலாம். யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள்.அரசுப் பள்ளிகளின் மீது மக்கள் மதிப்பு குறைவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. உதாரணமாக, தருமபுரியில் மாவட்ட அளவில் முதல் மற்றும் மூன்றாவது இடத்தில் வந்த மாணவர்களின் பெற்றோர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள். ஆனால் அவர்களது குழந்தைகள் தனியார் பள்ளியில்தான் படித்து, மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவரின் பெற்றோரும் ஆசிரியர்கள். அந்த மாணவரும் தனியார் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். இதற்காக ஆசிரியர்களைக் குறை சொல்ல முடியாது. ஆனால், இதையெல்லாம் அறியவரும் சாதாரண மக்கள், அரசுப் பள்ளி ஆசிரியருக்கே பள்ளி மீது நம்பிக்கை இல்லை என்று நினைப்பார்களே தவிர, தமிழ் வழி, ஆங்கில வழி என்று பிரித்துப் பார்க்க மாட்டார்கள். இதனால் அரசுப் பள்ளிகளைப் பற்றி குறைத்துதான் மதிப்பிடுவார்கள்.மேலும், தற்போது அரசு வழங்கும் பரிசுப் பணம் மிகமிக சொற்பம். சென்ற ஆண்டில், முதல் மூன்று இடங்களில் வரும் மாணவருக்கு ரூ. 15,000, ரூ. 12,000. ரூ. 10,000 வழங்கியது. இத்தொகை தற்போது முறையே ரூ. 50,000, ரூ. 30,000, ரூ. 20,000 என்று உயர்த்தப்பட்டபோதிலும், இன்றைய கல்விக்கட்டணங்களை ஒப்பிடும்போது இது மிகமிக சொற்பத்தொகை.இந்த மாணவர்கள் நிச்சயமாக பொறியியல் அல்லது மருத்துவப் படிப்பை அரசுக் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மூன்று இடங்களில் வரும் மாணவர்களின் உயர்கல்விச் செலவு முழுவதையும் அரசு ஏற்றாலும்கூட தமிழக அரசுக்குப் பெரும் இழப்பு ஏற்படாது. திரைப்படத்தின் பெயரை தமிழில் வைத்தாலே ஒரு லட்ச ரூபாய் கொடுக்கிறார்கள். தமிழ் வழியில் படிக்கும் மாணவருக்குக் கொடுத்தால் என்ன!தமிழ்வழி, ஆங்கிலவழி என இரு தரவரிசைப்படுத்தி பரிசுகள் அளிப்பதன் மூலம், அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கும் பரிசும் பாராட்டும் கிடைப்பதால், மாணவர் சேர்க்கையில் ஆர்வம் ஏற்படும். அதேவேளையில், அந்த மாணவர்கள் படித்த அரசுப் பள்ளி ஆசிரியர் குழுவுக்கும் ஒரு தொகையை ரொக்கப்பரிசுடன் நல்லாசிரியர் விருதும் கொடுத்தால், அரசுப் பள்ளிகளிலும் கற்பித்தல் போட்டி உருவாகும்.இல்லையானால், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மட்டுமே வளரும். அவர்கள் வைத்ததுதான் கல்விக் கட்டணம் என்றாகும்.
பிற செய்திகள்
கருத்துக்கள்

TAMIL MEDIUM EDUCATION SHALL BE ENCOURAGED WELL MOREOVER TAMIL KEY BOARDS FOR COMPUTERS SHALL BE MADE AVAILABLE IN THE MARKET. AND THERE ARE STATE BOARD, MATRICULATION, AND CBSE SYLLABUS ALL THE SYLLABUS SHALL BE MADE ONE SYLLABUS AND ONE EDUCATION. MATRICULATION SYLLABUS IS MORE WELCOME SYLLABUS. IN MATRICULATION SCIENCE IS DIVIDED INTO PHYSICAL SCIENCE AND BIOLOGICAL SCIENCE FOR WHICH TWO DIFFERENT TEACHERS ARE APPOINTED BUT WHEREAS IN STATE BOARD SYLLABUS BOTH PHYSICAL SCIENCE AND BIOLOGICAL SCIENCE ARE TO BE TAUGHT BY A SINGLE TEACHER NO SCIENCE TEACHER CAN DO JUSTICE TO BOTH SCIENCES.

By M. Annamalai
6/22/2009 8:42:00 PM

Hello guys this Amirtham is relative of CM. Dont you know? He can arrange for meeting CM definitely. He was in films if I remember right. Naturally he is upset on criticism. Anyway the plight of tamilmedium students from districts is very pathetic. Because of lower standard of teaches( getting highly paid by govt).It should be rectified first

By S Raj
6/2/2009 10:21:00 AM

திருஅப்பன் எழுதிய கருத்தினைப் படித்ததும் திரு அமிர்தத்தின் கருத்தினையும் திருஇலக்குவனார திருவள்ளுவன் கருத்தினையும் படித்துப் பார்த்தேன். பொது மக்களிடம் உள்ள ஆங்கில வழிக் கல்வி மோகத்தைப் போக்க வேண்டு்ம் என்று கூறியுள்ளார். ஆட்சியில் நீண்ட காலம் இருந்தவர்களுக்கும் இப்போது இருப்பவர்களுக்கும் அதற்கான பொறுப்பு உள்ளதால் அதனைச சுட்டிக் காட்டுகிறார். இவரது கடிதங்கள் பல தினமணியில் வந்துள்ளதைப் படித்துப் பார்த்துள்ளேன். இப்பொழுதும் இணையத்தில் படித்துப் பார்க்கின்றேன். தமிழ வளர்ச்சி என்பதை மட்டும் மையமாக வைத்து நடுநிலையுடன்தான் எழுதுகின்றார். அதே நேரம் ஆட்சியில் உள்ளவர்களுக்கு அவர்களின் கடமையை உணர்த்துவதை அவர்களுக்கு எதிரானதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தவறான கருத்து இருந்தால் அதற்கு மறுப்பு தெரிவிக்கலாமே தவிர தவறான முறையில் எழுதுவது பண்பாடற்ற செயலாகும். பலரையும் தெளிவுபடுததும் திரு இலக்குவனார் திருவள்ளுவன் கருத்துகள் அறியாமையில்தான் இருப்போம் எனப் பிடிவாதம் பிடிப்பவர்களை மாற்ற முடியாதுதான்.

By M.Natarajan
6/2/2009 9:59:00 AM

/// காலப்ப்பொக்கில் திசை மாறி தமிழ் இப்போது காதல் செய்வதர்க்கு மட்டும் உகந்ததாக உள்ளது. தமிழில் விஞ்ஞானம், அறிவியல் வளர வில்லை.ஆங்கிலம் தேவை அதர்க்காக தமிழை ஒதுக்கினால் தமிழினம் உரு இழந்து விடும் /// இந்த லட்சணத்தில் எழுதுபவர் தமிழை வளர்ப்பது பற்றி வாய் கிழியப் பேசுறார்!

By சரவணன்
6/2/2009 9:44:00 AM

sir first i ask the question "how many students belong to 12 state board got a seat in engineering in IIT and M.B.B.S in JIPMER,AIMS in this year. WHY ? we have to think it first if we change the portion of 10 and twelth is not important, we want to change the entire study pattern to CBSE from 6-12 and 1-5 will also be most advance. and their is no matriculation,state board only CBSE syllabus. other wise its so difficult to coming generation.

By guru
6/2/2009 12:29:00 AM

Why dont we make all the students to answer 50% in English and 50% in Tamil ( Easy Tamil) . What makes wrong? While the students are writing tamil as a separate subject, why dont they write 50% in tamil in all the subjects? Learing in Tamil languae is not toooo hard. I was made Harder by the tamil lover. For eg: If a subject is published in TN Govt Text book then we dont understand, but it is published in Tamil Daily or Magainze or in any other books it is very easy to understand. Try to understand..............

By Rajesh
6/1/2009 9:20:00 PM

என்ன இது ? படிக்கிரதிர்க்கு வேதனை ஆக உள்ளது. தமிழ் வளர வேண்டும் என்று எழுதியவரை By amirtham ,6/1/2009 7:13:00 PM வசை படுகிரார் ?. எதிலெல்லாம் அரசியல் பண்ணுவது என்று விவஸ்த்தையே இல்லாமல் போய்விட்டது. தமிழனையும் தமிழையும் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

By Appan
6/1/2009 7:28:00 PM

இந்த இலக்குவனாருக்கு அப்படி என்னதான் ஆதங்கம் இருந்தாலும் அதற்காக எந்த தலைப்புக்கும் கருத்து என்கிற போர்வையில் முதல்வரை குறை கூறி வசைமாரி பொளிவதே இவருக்கு வேலையாகி விட்டது.இணையத்தளத்தில் வசைமாரி அர்ச்சனை செய்வதை விட்டு முதல்வர் வீட்டுக்கே நேரே வருவாரா நன் வேண்டுமானால் ஏற்பாடு செய்கிறேன்........கூறவும் ஒரு கோபாலபுர வாசி.

By amirtham
6/1/2009 7:13:00 PM

Tamil tamil nu solli tamil makkalai nasamakkum pokku eppothu than maarum.....

By Jeyahar.M
6/1/2009 6:38:00 PM

Good, To encourage Tamil a deep study is required. Strict orders to teach in Tamil Medium is essential. Norms for Recruitment Teachers and their qualification in Private Schools are to be viewed. The above are my quick thoughts. More to say. Any how Welcome the idea of Dinamani venkatesan

By VENKATESAN
6/1/2009 6:08:00 PM

பிற மொழியை செம்மையாகக் கற்பதற்குத் தாய்மொழியே கருவி. தாய்மொழி அடித்தளம் வலுவாக இருக்கும்போது பன் மொழித் திறன் சாத்தியம். Mother-tongue based multi-lingual Education என படிப்படியாக பலமொழிகளைக் கற்கும் பொருட்டு, எழுத்து வடிவமே இல்லாத மொழிகளுக்கும் எழுத்துரு தந்து குழந்தைகளின் Pre-primary எனப்படும் முன்பருவக்கல்வியைத் தாய்மொழியில் வழங்குகிறார்கள். வங்கதேசத்தில் திரிபுரா இன மக்களின் கோக்போரோக் Kokborok மொழிக்கு ரோமன் எழுத்துகளை ஏற்றுள்ளார்கள். இதைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது. எல்லாம் இருந்தும் ஒரு மிகச்சிறந்த்த மொழி நம் கண் முன் அழிகிறது. தரமான பள்ளிகள் இருந்தாலும் அங்கும் தன் குழந்தைக்கு மொழிப் பாடமாகக் கூடத் தமிழ் தேவையில்லை என பிற மொழிகள் கற்பிக்க பெற்றோர் முன்வருகின்றனர். தாய்மொழி, தரம் என்பதைத் தாண்டி வருங்காலப் பயன் எனக் கணித்து தமிழ் மொழியைப் புறந்தள்ளுகிறார்கள். தமிழ்ச்சூழலை இழந்து, வேரற்ற மரமாகவே குழந்தைகள் வளர்கிறார்கள். அரசுப் பள்ளிகள் ஒளிபெற்று, தரமான தாய்மொழி வழிக்கல்வி வலிமை பெறும்போது மெல்லத் தமிழ் இனி வாழும்! பாராட்டுகள், ஊக்கப் பரிசுகள், உயர் கல்வி வாய்ப்புகள் அவச

By Bhuvana
6/1/2009 6:05:00 PM

Tamil Naming for TAMIL movies are honoured by the Tamil Nadu's Govt by rewarding IRS 1,00,000,just spending for the immagination, but for the students & for the suffering Teachers are really not been honoured by Govt.Thank you Dinamani for your suggestion Nazeer.B

By Nazeer B.
6/1/2009 4:54:00 PM

I am accepting the concept of the above "Thalaiyangam" wholeheartedly. Thanks Dinamani for the "spark" thinking-suggestion to the Govt.

By pksamy
6/1/2009 4:53:00 PM

கல்வி விஷயத்தில் நல்ல முன்னேற்றம் வரவேண்டும் என்பதில் மிக முக்கிய அக்கறை தேவை ஏனெனில் நாடு இளம் தலைவர்களை நம்பி உள்ளது அவர்கள் கல்வியில் சிறந்தோங்கி வளரவேண்டும் தற்போது நடை முறையில் இருக்கும் இச்சலுகை மட்டுமின்றி வேறுபல சலுகைகளையும் அரசாங்கம் செய்யவேண்டும் இன்னமும் அரசுப்பள்ளிகளில் பள்ளி மாற்று சான்றிதழ் கேட்டு வரும் ஏழை பிள்ளைகளிடம் '' காசு கேட்டு டி சி கொடுக்கும் '' இழி நிலைதான் நீடிக்கிறது.அரசு செய்யும் சலுகைகள் பிள்ளைகளுக்கு எட்டாமல் போவது இதுபோன்ற'' கருப்பு ஆடு ''களால்தான் அவையெல்லாம் சீர்படுகிறதா என்று பார்த்தால்தான் முழு பலன் கிட்டும்

By கடலூர் ஓ.டி.நஜீர் அஹமது துபாய்
6/1/2009 4:43:00 PM

உண்மையில் நல்ல கருத்து இதை உரக்க சொன்ன தினமணிக்கூ ஒரு ஜே போடலாம் ஆனாலும் தமிழக அரசு காதுகளில் நன்றாக ஒலிக்கும் படி மறு தடவை சில காலத்திற்கு பிறகு போடவேண்டும் அத்துடன் அதுசம்பந்தமாக அரசு ஏதேனும் கொள்கைகள் ஏதேனும் வெளியிட்டதா என பார்த்து மறு தலையங்கம் இடவேண்டும் நல்ல முயற்சி வெற பெற வாழ்துக்கள்

By கௌஸ் முஹைதீன் துபாய்
6/1/2009 4:31:00 PM

தினமனியின் இந்த தலையங்கம் தமிழினத்தின் முக்கியமான பிரச்சினையை பற்றி ஆதங்கத்தோடு எழுதி உள்ளது. தினமனிக்கு வாழ்த்துக்கள். மனிதனின் சிந்தனை வளர்த்திக்கு மொழி முகியம்.Thought process is limited by language. வளர்ந்த நாடுகலின் மொழி சமூதாய வளர்ச்சிக்கு உகந்ததாக உள்ளது. ஆஃபிரிக்காவின் வளர்ச்சி இண்மைக்கு ஒரு முக்கிய காரணம் வளர்ந்த மொழி இல்லாலை. தமிழ் ஒரு காலத்தில் வளர்ந்த மொழியாக இருந்து தமிழ் இனம் செழிக்க உருதுணையாக இருந்தது. காலப்ப்பொக்கில் திசை மாறி தமிழ் இப்போது காதல் செய்வதர்க்கு மட்டும் உகந்ததாக உள்ளது. தமிழில் விஞ்ஞானம், அறிவியல் வளர வில்லை.ஆங்கிலம் தேவை அதர்க்காக தமிழை ஒதுக்கினால் தமிழினம் உரு இழந்து விடும். ஆங்கிலம் இல்லாமல் வளர்ந்த நாடுகள் -ஜெர்மெனி, ஜப்பான், சீன, பிரான்ஸ் போன்ற நாடுகள் எப்படி மொழியை ஆங்கிலத்திர்க்கு நிகராக வளர்த்தி உள்ளார்கள் என தெரிந்து தமிழை வளர்க வேண்டும். அதர்க்கு முதல்படி பொறியியல் கல்லூரிகலில் 50% உதவித்தொகையோடு தமிழில் படித்தவர்களுக்கு என ஒதுக்க வேண்டும். சமீபத்தில் தொடங்கப்பட்ட தமிழ் பல்களை கழகம் முழு வீச்சுடன் தமிழில் அறிவியல், விஞ்ஞனம் பற்றி ஆராய்ச்சி நடத்த

By Appan
6/1/2009 4:04:00 PM

a GOOD THINKING .well said Ranga durai .Also engg medical seats to be reserved for tamil medium students.In Tamilnadu if no priority and special status to tamil medium people how much we respect our mother tongue?

By Tamil Durai
6/1/2009 3:10:00 PM

This is not right. students will struggle when they go for higher studies. There are no of ways to spread a language. If someone says that studying science etc., in tamil medium is the only way then it is not correct. i am telling this from my personal experience. This view is similar to what our CM told in 70s about hindi.

By Rengarajan
6/1/2009 2:46:00 PM

in tamilnadu most of the govt staffs are not willing to join their childrens in govt schools. because they know the education quality of the govt schools.this should be change.govt should give all the childrens a good education like developed countries.

By kumar
6/1/2009 2:44:00 PM

YES, INCENTIVES AND PRIZES SHALL BE GIVEN TO TAMIL MEDIUM STUDENTS. MOREOVER WE SHOULD THINK WHY PARENTS ARE RELUCTANT TO ADMIT THEIR CHILDREN IN GOVERNMENT SCHOOLS, THERE IS NO PROPER FURNITURE FACILITY AND NO ADEQUATE TEACHERS. FOR EXAMPLE THERE IS A GOVERNMENT HIGH SCHOOL IN VELAVALLI NEAR MATHUR IN KRISHNAGIRI DISTRICT WHERE THERE IS NO TEACHER EXCEPT THE HM A FEW PTA STAFF WERE APPOINTED BUT THEY WERE NOT PAID THEIR SALARY FOR THE PAST 5 MONTHS.IN SPITE OF THESE DRAWBACKS THAT SCHOOL GOT 71% RESULT IN SSLC WHO IS TO BE BLAMED?

By M. Annamalai
6/1/2009 1:54:00 PM

UNAMAYILEA NAN DINAMANI ASIRIYARKKU NANTRI SOLLA KADMAI PATTULEN ENGA VEETLA KOODA PRIVATE SCHOOLATHAN PASANGALA SERTHU IRUKKOM VEDASNTHOOR(DINDUKAL DIST) MANAVI STATE LEVEL 3 M EDAM EDUTHATHU POLA ELLA GOVRNMET SCHOOL M STATE LEVEL A VARATHUKKU TAMIL TAMIL ENTRU PESUM CUREENT GOVERNMENT NALLA NADAVADIKKAI EDUKKUM ENTRU AVAA. (EN MARIYATHAKURIYA ELUTHLAR Gaani AVARKAL KUMUTHAM VARA ETHLIL ELUTHUM O PAKKANKAL NABAKAM VARTHU - OUR CHEIF MINISTER LAWER&POLIC FIGHTINGLA ADIPATTAVARKAL Praivate HOSPITALA TERATMENT EDUPPAVARKALUKU TREATMENT FEES GOVERNMENT GIVE CHEIF MINIDTERKKEA GOVENMENT HOSPILA NAMBIKAI ILLAI)

By shahul m.ksim
6/1/2009 1:12:00 PM

இந்த எண்ணம் சரியானது தான். ஆனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் கல்வி தரமானது தானா என்பதையும் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். தனியார் பள்ளிகளில் பிள்ளைகளின் மதிப்பெண்ணை மையமாக கொண்ட கல்விதான் தரப்படுகின்றது. அரசு பள்ளிகளிலோ பிள்ளைகளின் கல்வியை பற்றிய எண்ணமில்லாமல் கடமைக்கு பாடம் நடத்துகின்றார்கள். இந்த நிலை மாறினால் தான் நல்ல மனிதர்களை உருவாக்க முடியும்.

By இளந்திரையன்
6/1/2009 12:08:00 PM

காலத்திற்கு ஏற்ற தரமான தலையங்கம். வீழ்வது நாமாக இருப்பின் வாழ்வது தமிழாக இருக்கட்டும் வாய் கிழிய பேசுபவர்கள் இந்த தலையங்கத்தை சற்று கூர்ந்து பார்க்கட்டும்.அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் ஏன் தங்கள் பிள்ளைகளை சேர்க்க தயங்குகின்றன என்ற காரணங்களை ஆராய்ந்து அதனை களைய முயற்சி செய்யவேண்டும். மேலும் அரசு பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என சட்டம் இயற்ற வேண்டும் அப்போதுதான் தாங்கள் பிள்ளைகள் மேல் உள்ள அக்கறை பள்ளி மீதும் ஏற்படும்.

By அலாவுதீன்
6/1/2009 11:05:00 AM

dinamaniyil thamilil eppadi karuthu sollvathu?

By m. vaiyapuri
6/1/2009 10:45:00 AM

Recently, In UAE, The Primary, secondary school teachers skill evalution made by the government and they scrutinised, recruted well qualified teachers. Nama Tamil Nattil DPI, DEO, CEO adhigaarigalin OOzhal,10th std, +2 padithu vittu just pass panni( 40% Marks)kottavila seattu vaangi private nadathum Teacher training schoolil Rs. 2 Lakh kattittu DTE padikkum maanvargalidamum, kottavilum, seniorityyilum Teacher promotion likesecondi grade, BT, AEO, DEO,CEO agira teacher's ulla varai Tamilnadu mattumalla, Indiavin kalvi murayil onnum panna mudiyaathu. most of Govt school teacher tution nadathurathum, varusathukku 165 naalu mattume pallikoodam vanthu vaangura sambalathai matra naatkalil pakkathilulla townil chit company nadathurathu, kandu vaddikku vidarathu, vasool pandrathu madhiri activities thaan seigiraargal. Munbellam AAsiriyar Thozhil Punithamaaga karuthap pattathu! Ippo?

By Abu Dhabi Gokul
6/1/2009 10:35:00 AM

மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழி கல்வி கற்பவர்களுக்குப் பொறியியல், மருத்துவப் படிப்புகளில் குறைந்தது 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். பொதுப் பிரிவிருக்கான இடங்களுக்கும் இவ்வொதுக்கீடு பொருந்துமாறு செய்யவேண்டும்.

By பா. ரெங்கதுரை
6/1/2009 10:23:00 AM

Well, ASHWIN, you might be right. But along with the scholar ships they should attach a class where you should service the public for a while, especially the doctors, who doesn't want to work in the remote places and villages.

By Tamizhan
6/1/2009 9:17:00 AM

Cash-awards only are not enough. Scholarships supporting them till they pass out as Graduates in their chosen fields will foster the students' interests and generally motivate them to put efforts to learn. While talking of curriculum, there is nothing wrong in studying more languages and Government need not narrow it down to "one". In fact, the trend of Authorities seems to say, "Don't study this; don't study that" and so on. It should be ,"we do not want to restrict the learning venues of students and they will decide what they want". 'Right to Education' in true sense, as what I understand, should only that. Tendency to say, "Don't study that". NO, NEVER!

By ASHWIN
6/1/2009 7:38:00 AM

நல்ல கருத்து இனி யாவது ஊக்கம் பெருமா தமிழ் வழி கல்வி

By கார்த்திக்கேயன்
6/1/2009 7:28:00 AM

Dont forget that it is the use of English that has got the jobs for the youth in India in IT and ITES secors. So You dont want to kill the goose that lays golden eggs under the guise of promoting Tamil medium.India is recognised for its english knowledge population ahead of China who will catch up with us in another 4-5 years. Then edge will be gone.

By S Raj
6/1/2009 7:27:00 AM

The need of the hour is to improve the standard of teaching in Govt run and aided schools. The teachers there are only interested in attending school and take care of their personal interests.Mnany of them are poor in their teaching. They are not dedicated and allow students to copy to show percentages.The students who pass out do not possess even minimum skills for jobs.

By S Raj
6/1/2009 7:22:00 AM

மிக நல்ல ஆலோசனை.தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கு ஊக்கமாக இருக்கும்.தமிழ் வழி கல்வியை ஆராரிக்கும் தினமணிக்கு நன்றி.வாழ்த்துக்கள்.

By கல்பனாசேக்கிழார்
6/1/2009 7:05:00 AM

தமிழ் நாட்டில் தமிழ் வழியாகப் பயிலும் மாணக்கர்களுக்கு மட்டும் அரசு உதவிகள் வழங்கினால் போதுமானது. பிற மொழி வாயிலாகப் பயிலுவோருக்கும் பிற மொழி பயிலுவோருக்கும் அந்தந்த மொழி பேசுவோர் உதவி செய்தால் போதுமானது. தினமணி சரியான நேரத்தில் தலையங்கம் எழுதயிருந்தாலும் ஆளுவோர் செவிகளில் ஏறாது. 'கஞ்சி வரதப்பா!' என்றால் 'எங்கே எங்கே வருதப்பா' என்பதுபோல் குடும்பத்தினருக்கான பதவி அறிவிபபு மட்டுமே செவியில் ஏறும். எனவே மக்களை விழிப்படையச் செய்யு்ங்கள். பிற மொழி வழிக் கல்வி மோகமும் கல்வியகங்களின் கட்டணக் கொள்ளைக்குக் காரணம் என்பதை உணர்த்துங்கள்! தமிழ் வழிக் கல்விக்குக் குரல் கொடுக்கும் தினமணிக்குப் பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/1/2009 4:54:00 AM

This is very goods idea and boosting for tamil medium student. Thanks for Dinamani.

By HAJA MAIDEEN
6/1/2009 4:52:00 AM

Dear Mr.Paris Ejilan,a humble suggestion:Please use CAPS only when necessary.Thx

By Sinha
6/1/2009 4:46:00 AM

IT SEEMS TO BE A GOOD IDEA.

By Paris EJILAN
6/1/2009 3:17:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக