செவ்வாய், 19 ஜனவரி, 2010

சட்டப்பேரவை கட்டட திறப்பு விழா: சோனியா பங்கேற்பு



சென்னை, ஜன.19: சென்னையில் கட்டப்பட்டுவரும் தமிழ்நாட்டின் புதிய சட்டப் பேரவைக் கட்டடத் திறப்பு விழாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி பங்கேற்கிறார்.புதிய சட்டப் பேரவை மற்றும் தலைமைச் செயலக கட்டடங்களின் கட்டுமானப் பணிகள், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.சட்டப் பேரவைக் கட்டடத் திறப்பு விழா மார்ச் 13-ம் தேதி நடைபெறுகிறது. இதில், பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியும் சட்டப் பேரவைக் கட்டடத் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்தத் தகவலை முதல்வர் கருணாநிதியின் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துக்கள்

தமிழர்களின் அவலங்களுக்குக் காரணமான சோனியா அச்சமின்றித் தமிழ் நாட்டிற்கு வரலாம். ஏனெனில் இது பஞ்சாப் அல்ல. முன்னரே எவ்வகை எதிர்ப்புமின்றி பெரும்பாலான தமிழர்களின் புறக்கணிப்பிற்கு ஆளான காங்.கட்சியின் தலைவர் இராகுல் தமிழகமெங்கும் சுற்றி வந்தார் அல்லவா? அதுபோல் இவரும் வரலாம்.ஏனெனில் தமிழர்கள் சூடு சொரணையுள்ள பஞ்சாபியர் அல்லர். எனவே, அவர் அஞ்சாது வரலாம். நன்றி, விருந்தோம்பல், கொடை முதலான பண்புகளில் ஊறி நாட்டைத் தாரை வார்ப்பதிலும் அடிமைத்தனத்தில் முதலிடம் வகிப்பதிலும் தமிழர்கள் முதன்மையானவர்கள். எனவே, தமிழ் நாட்டிற்கு அஞ்சாமல் வரலாம். ஆனால், தம்மை வரவேற்கும் தமிழர்களுக்காகத் தாம் செய்து வரும் கொடுமைகளை எப்போது நிறுத்தி எவ்வாறு கழுவாய் தேடப் போகிறோம் எனத் தன் மனச் சான்றிடம் கேள்வி கேட்டு அதன்படி நடந்தால் போதுமானது.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

By Ilakkuvanar Thiruvalluvan
1/19/2010 2:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக