மும்பை, ஜன.18: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களும் மராத்தி மொழியில் பேச வேண்டும் என்ற மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனை (எம்என்எஸ்)அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் இதன் தலைவர் ராஜ் தாக்கரே கடிதம் எழுத உள்ளார்.÷இந்தக் கடிதத்தை மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களிடமும் இந்த அமைப்பின் தொண்டர்கள் பிப்ரவரி மாதம் 27-ம் தேதி விநியோகிக்க உள்ளனர்.÷பிப்ரவரி 27-ம் தேதி மராத்தி மொழி தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினமே மராத்தி மொழி கோரிக்கை வலியுறுத்தும் கடிதத்தை விநியோகிக்க முடிவு செய்துள்ளதாக கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்தார்.÷வட இந்தியர்களுக்கு எதிரான போராட்டத்தை மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரத்தில் குடியேறியுள்ள பிகார் மாநிலத்தவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக பல்வேறு போராட்டங்களை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது.÷அரசியல் கட்சியாக உருவாகியுள்ள இந்த அமைப்பு தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளாகிறது. அதற்குள்ளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியதன் மூலம் இந்த அமைப்பு பிரபலமாக மாறியுள்ளது. ÷மராத்தி தினம் கொண்டாடப்படும் பிப்ரவரி 27-ம் தேதி பிரபல மராத்தி கவிஞர் வி.வி. ஷிர்வாத்கராகா குஸýம்மஹராஜ் பிறந்த நாள் நூற்றாண்டு விழா வருகிறது. எனவே அந்த தினத்தன்றே ராஜ் தாக்கரே எழுதிய கடிதத்தின் பிரதிகளை அனைத்து மக்களிடமும் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ÷இரண்டு ஆண்டுகளுக்கு முன் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனை அமைப்பினர்அனைத்து விளம்பர போர்டுகளையும் மராத்தி மொழியில் எழுதுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட விளம்பர வாசகங்களை தார் ஊற்றி அழித்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்
தமிழ் மக்களும் தமிழில் பேசவும் எழுதவும் அவ்வாறு பேசும்போதும் எழுதும் போதும் பிற மொழிக் கலப்பின்றித் திழிலேயே பேசவும் எழுதவும் தமிழிலேயே பயிலவும் தமிழிலேயே வழிபடவும் தமிழ் அல்லாதவற்றைப் புறக்கணிக்கவும் பிற மொழி யறிவை நம் சிறப்பைப் பிற மொழியினருக்கு அறிவிக்கவும் பிற மொழிகளில் உள்ள சிறப்பை நம் மொழிக்குக் கொணரவும் பயன்படுத்தவும் தமிழ் நாட்டில் தமிழர்களுக்கே முதன்மை அளிக்கவும் முன்வரவேண்டும். செந்தமிழ்காக்க சிறை சென்ற பேராசிரியர் சி.இலக்குவனார் நூற்றாண்டை முன்னிட்டு இதைச் செய்து முடிப்போம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
1/19/2010 3:41:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
1/19/2010 3:41:00 AM