ஞாயிறு, 16 ஜூன், 2013

தமிழுக்கு த் தொண்டாற்றிய சப்பானியர்!

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2013,00:00 IST


தமிழுக்கு த் தொண்டாற்றிய சப்பானியர்!
தமிழ் மொழிக்கு தொண்டு செய்ததற்காக, பிரதமரிடமிருந்து  தாமரை த திரு (பத்மசிரீ) விருது பெற்ற, தமிழறிஞர் நொபுரூ கராஷிமா: நான், ஜப்பான் நாட்டை சேர்ந்தவன். தமிழகத்தின் பல பெற்றோர், தங்கள் குழந்தைகளை இங்கிலிஷ் மீடியத்தில் படிக்க வைக்க, பல லட்சங்களை செலவிடுகின்றனர். ஆனால் நான், தமிழ் மொழி மீதான ஆர்வத்தால், ஜப்பானிலிருந்து பல ஆயிரம் மைல் தூரத்தை கடந்து, தமிழகம்
வந்தேன். தமிழ் மொழியை கற்று, புலமை பெற்றேன்.
நான், வரலாற்றை ஆய்வு செய்யும் அறிஞர் என்பதால், தமிழக கல்வெட்டுகளையும், தமிழினத்தின் வரலாறு தொடர்பான நூல்களையும் படித்து, தென்னக வரலாற்றை அறிந்து கொண்டேன். தமிழக கல்வெட்டுகள் தொடர்பாக நான் ஆராய்ந்தவற்றை, 10க்கும் மேற்பட்ட நூல்களாக வெளியிட்டுள்ளேன். இவை, கல்வெட்டு தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு உதவியாக உள்ளன.
தமிழ் பற்றிய ஆராய்ச்சி முடிந்ததும், மீண்டும் ஜப்பான் சென்று, டோக்கியோ பல்கலை கழகத்தில், தெற்காசிய வரலாற்று பேராசிரியராக பணியாற்றினேன். டாய்ஷோ பல்கலை கழகத்தில், இந்தியவியல் துறையின் பேராசிரியராக பணியாற்றிய போது, என்னை போன்று பல ஆராய்ச்சி மாணவர்களை
உருவாக்கினேன். நான், "சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின்' தலைவராக பணியாற்றும் காலத்தில், 1995ல், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, தஞ்சையில் நடைபெற்ற, "எட்டாவது உலக தமிழ் மாநாட்டை' வெற்றிகரமாக நடத்தினேன்.
தமிழுக்கு தொண்டு செய்ததற்காக, கடந்த ஏப்., 5ம் தேதி, "பத்மஸ்ரீ' விருது வழங்கி, பாராட்ட அழைத்த போது, என் உடல் நிலை சரியில்லை. அதனால், பிரதமர் மன்மோகன் சிங், ஜப்பானிய பயணமாக சமீபத்தில் வந்த போது, என்னிடம் விருது வழங்கினார். சக்கர நாற்காலியில் நான் அழைத்து வரப்பட்ட போது, பிரதமருக்கு வணக்கம் சொல்லி பேச ஆரம்பித்த நான், இறுதியாக, "நன்றி' சொல்லி தமிழராக நடந்து கொண்டேன்.

நகர்த்தலும் உயர்த்தலும் -லிப்டிங்அண்டு ஷிப்டிங்!

பள்ளத்தில் உள்ள வீட்டை, மேல் நோக்கி உயர்த்தும் புதிய தொழில்நுட்பத்தை கூறும்,
இன்ஜினியர் சுஷில்: நான், ஆரம்பத்தில் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் பணியில் தான் ஈடுபட்டிருந்தேன். கன்ஸ்ட்ரக்ஷன் தொடர்பான ஆராய்ச்சிக்காக, வெளிநாடுகளுக்கு சென்ற போது, பள்ளத்தில் உள்ள வீட்டை, 3 அடிக்கு மேல் உயர்த்தும் தொழில்நுட்பத்தை, தெரிந்து கொண்டேன். இன்று வீடு கட்டுவது, வாழ்நாள் கனவாக உள்ளது.கஷ்டப்பட்டு கட்டினால், சில காலங்களிலேயே சாலைகள் உயர்த்தப்படுவதால், ஆசையாக கட்டிய வீட்டிற்குள், மழைநீர் வரும் அளவிற்கு, சாலைகளை விட, கீழே இருக்கும் நிலை ஏற்படுகிறது. இக்குறைபாட்டை தவிர்க்க தற்போது, "லிப்டிங் அண்ட் ஷிப்டிங்' என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுகிறது. இதன் படி, வீட்டின் மொத்த தரைதளத்தையும் சுற்றி, குறிப்பிட்ட ஆழத்துக்கு பள்ளம் தோண்டி, "பேஸ்மென்ட்'டின் சரிபாதியை அறுத்து, அந்த இடத்தை சுற்றிலும் இரும்பு தகட்டை பொருத்த வேண்டும்.இரும்பு தகட்டின் கீழ், எல்லாபுறமும் சரியான உயரத்தில், ஜாக்கிகள் பொருத்தப்பட வேண்டும். பின்னர், தரைதளத்தில் இருக்கும் பைப் லைன், செப்டிக், டிரெய்னேஜ் போன்ற கனெக்ஷன்கள், டெம்ரரியா செதுக்கி, எல்லாம் சரியாக அமைந்த பின், "கவுன்ட் டவுன்' ஆரம்பிக்கும். பள்ளத்தில் உள்ள வீட்டை உயர்த்தும் இத்தொழில்நுட்பம், முழுக்க முழுக்க, மனித உழைப்பை நம்பியே செய்யக் கூடிய வேலை.இயந்திரங்களை பயன்படுத்தாததால், நொடிக்கு நொடி, கவனமாக செயல்படுவது முக்கியம். எல்லா ஜாக்கிகளும் சரியான நேரத்தில், 108 தடவை சரியாக இயக்கப்பட்டால், கட்டடம், 4 அங்குலம் உயர்ந்து விடும். தனி வீடு, அபார்ட்மென்ட், காம்ப்ளக்ஸ் என, எதை வேண்டுமானாலும் இம்முறையில் உயர்த்தலாம், நகர்த்தலாம். வீட்டின் அமைப்பு மாறாமல் இருப்பதோடு, கட்டடத்தின் ஆயுளும் தொடர்கிறது.இதனால், நேரம், புது வீடு கட்டும் பணம் போன்றவை, நமக்கு மிச்சமாகின்றன. ஐரோப்பிய நாடுகளில், சர்வசாதாரணமாக பயன்படுத்தப்படும் இத்தொழில்நுட்பம், விரைவில் இந்தியாவில் பயன்படுத்தும் நிலை வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக