சனி, 22 ஜூன், 2013

குழந்தைகளுக்கான முதலுதவி!

குழந்தைகளுக்கான முதலுதவி!
விபத்தின் போது, குழந்தைகளுக்கான முதலுதவி செய்யும் முறையை க் கூறும், மருத்துவர், தியாகராஜன்: நான், தஞ்சாவூரை சேர்ந்த, மனநல மருத்துவர். குழந்தைகள் கையில், எந்த சிறிய பொருளும் கிடைக்காதவாறு, கவனமாக இருந்தாலும், அதையும் மீறி, பட்டன், மாத்திரை, பல்பம் போன்ற சிறிய பொருட்களை, குழந்தைகள் விளையாட்டாக வாயில் போட்டு மெல்லுவர். அப்பொருட்கள் தவறுதலாக, மூச்சுக் குழல், உணவுக் குழல், தொண்டைக் குழி
போன்றவற்றில் சிக்குவதால், குழந்தைகள் விழி பிதுங்கி, மூச்சுவிட சிரமப்பட்டு, அழுதபடி, வினோத சத்தத்துடன் இருமி, தும்மி, அதை, வெளிக் கொணர முயற்சிப்பர். அப்போது, குழந்தையை மடியில்
குப்புற போட்டு, தலையை சற்று கீழாக வைத்து, முதுகில் ஓங்கி தட்டினால், தொண்டையில் சிக்கிய பொருள், மிக சுலபமாக வெளிவரும். ஆனால், பெற்றோர், "குய்யோ முறையோ' எனக் கத்தி, முதலுதவி செய்யாமல், மருத்துவரிடம் வருவதற்குள், மரணம் கூட ஏற்படலாம். எனவே, முதலுதவியில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
அடுப்பில் இருந்து இறக்கப்பட்ட பாத்திரங்களில், குழந்தைகளின் கை, கால்கள் பட்டு, அந்த இடமே வெந்து புண்ணாகும். அப்போது பெற்றோர், சற்றும் தயங்காமல் குழாயை திறந்து, அதிக நேரம் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். காயத்தில் தண்ணீர் பட்டால்,
சீழ் பிடிக்கும் என்பது தவறான கருத்து. சுத்தமான கையால், காயத்தின் மீது தோசை மாவை தடவிய பின், மருத்துவரிடம் அழைத்து செல்லலாம். குழந்தைகள், மூக்கில் ஏதாவது பொருட்களை
போட்டால், மூக்கு பொடி மாதிரியான பொருட்களை, மூக்கில்
போட்டு தும்ம வைக்கும் போது, அப்பொருட்கள் வெளியேறினால் நல்லது. இல்லையேல், மூச்சு குழலில் மாட்டி உயிருக்கே ஆபத்து
நேரிடும். குழந்தைகளின் காதுகளில், பூச்சி அல்லது ஏதேனும் போய் விட்டால், முதலில் தண்ணீர் ஊற்றுவது தவறு. தேங்காய் எண்ணெய்
போன்றவை ஊற்றினால், பூச்சிகள் மிதந்து வெளியேறும். குச்சி
போன்ற பொருட்கள் இருந்தால், உடனே மருத்துவரிடம் அழைத்து செல்வது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக