திங்கள், 17 ஜூன், 2013

வேப்பமரத்தில் அற்புதமான "வீரிய ஊக்கி':கால்நடை டாக்டர் கண்டுபிடிப்பு

வேப்பமரத்தில் அற்புதமான "வீரிய ஊக்கி':கால்நடை மருத்துவர் கண்டுபிடிப்பு
 
தேனி:தேனியை ச் சேர்ந்த, கால்நடை அரசு மருத்துவர் உமாகாந்தன், மருந்து, பெட்ரோல் உள்ளிட்டவைகளின் சக்தியை அதிகரிக்கும், "வீரிய
ஊக்கி'யை கண்டுபிடித்து உள்ளார். இதற்கான வேதிப் பொருள், வேப்பமரத்தில் அதிகம் இருப்பது, கண்டறியப்பட்டு உள்ளது. போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த இவர், பொள்ளாச்சி கஞ்சம்பட்டி அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார். கடந்த எட்டு ஆண்டு ஆராய்ச்சியில், "வீரிய ஊக்கி' (பொட்டன்ஷியேட்டர்) என்ற, ஒரு வகை உப்பை கண்டுபிடித்துள்ளார். அவர் கூறியதாவது:"பென்சிலின்' என்பது "ஆன்டிபயாடிக்' சக்தி கொண்டது. வேப்பமரத்துக்கும், அதே சக்தி உண்டு. வேப்பமரம், பல நூறு ஆண்டுகளாக, அதே சக்தியுடன் உள்ளது; ஆனால், "பென்சிலின்' விஷமாக மாறி வருகிறது.

இதை முன்வைத்து, ஆராய்ச்சி செய்தேன்."நிம்பின்' என்ற வேதிப்பொருள் மூலம், "ஆன்டிபயாடிக்' தன்மையை, வேப்பமரம் அதிகரிக்கச் செய்து கொள்கிறது; "பென்சிலின்', மாற்றிக்கொள்வதில்லை. இந்த மாற்றத்தை உருவாக்கும், "நிம்பின்' குறித்து ஆராயப்பட்டது. அது, "பொட்டன்ஷியேட்டர்' எனப்படும் "வீரிய ஊக்கி உப்பு' என, கண்டறியப்பட்டது. இந்த "வீரிய ஊக்கி' யை, குறைந்த அளவு மருந்துடன் சேர்த்து பயன்படுத்தினால், அதிக வீரியம் கிடைக்கும். குறைந்த அளவு "ஆன்டிபயாடிக்' மருந்து, பயன்படுத்தினால் போதும். இதை, பெட்ரோல், டீசலில் குறிப்பிட்ட அளவு சேர்த்தால், எரிபொருள் சிக்கனம் கிடைக்கும்; மாசு உண்டாக்கும் புகை அளவை குறைக்கலாம். இதே போல மண்ணெண்ணெய், நல்லெண்ணெய், பசும்பால், நெய்யில் சேர்த்து, ஆராய்ச்சி செய்யப்பட்டது; இதில், பயனுள்ள முடிவுகள் கிடைத்தன. விவசாயம் மற்றும் சிமென்ட், ரப்பருடன், சரியான விகித்தில் பயன்படுத்தினால், வீரியம் அதிகரிக்கும்; செலவு குறையும். இதே போல, 14 "வீரிய ஊக்கி' இருப்பதை கண்டுபிடித்துள்ளோம். தற்போது, ஒரு "ஊக்கி' யின் பயனை மட்டுமே கூறியுள்ளோம். அரசிடம், இந்த ஆராய்ச்சியை நிரூபிக்க தயாராக உள்ளேன், என்றார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக