செவ்வாய், 18 ஜூன், 2013

மருத்துவப் படிப்பிற்கு உதவியை எதிர்பார்க்கும் ஏழை மாணவி

மருத்துவப் படிப்பிற்கு உதவியை எதிர்பார்க்கும் ஏழை மாணவி

மதுரை:பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்று, மருத்துவம் படிக்க வாய்ப்பிருந்தும், பணம் வசதி இல்லாததால் தத்தளிக்கிறார் மதுரையை சேர்ந்த ஏழை மாணவி எம்.சங்கொலி.

ஒத்தக்கடை அருகே புதுத்தாமரைப்பட்டியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவர், மதுரையில் பூக்கடை ஒன்றில் தினக்கூலியாக உள்ளார். இவரது மகள் சங்கொலி, பிளஸ் 2 தேர்வில் 1152 மதிப்பெண் பெற்று சாதித்தார். இவரது மருத்துவ "கட்ஆப்' 195.25 . கூடுதலாக 0.75 மதிப்பெண் பெற்றிருந்தால், அரசு மருத்துவக் கல்லூரியிலேயே "சீட்' கிடைத்திருக்கும். ஆனால், தற்போது தனியார் மருத்துவ கல்லூரியில், அரசு ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தனியார் கல்லூரியில் படிக்க ஆண்டுக்கு குறைந்தது ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை செலவாகும். இக்கட்டணத்தை இவரது குடும்பத்தால் செலுத்த முடியாது. இதனால் வாய்ப்பு கிடைத்தும் மருத்துவம் படிப்பை தொடர முடியாத சூழ்நிலை மாணவி சங்கொலிக்கு ஏற்பட்டுள்ளது.

அவர் கூறுகையில், ""பூக்கடையில் தினக்கூலியாக உள்ள என் தந்தையால் மருத்துவம் படிப்பதற்காக இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாது. எனது கல்வி கட்டணத்தை அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் செலுத்தி, எனது டாக்டர் கனவை நிறைவேற்ற முன்வந்தால், பிற்காலத்தில் என்போன்ற ஏழை மாணவர்களுக்கும் நான் உதவுவேன்,'' என்றார்.
ஏழை மாணவிக்கு உதவி செய்ய விரும்பும் நல்ல உள்ளங்கள், 94422 94059 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக