அச்சுறுத்தி ப் பணம் பறிக்கும் தேவானந்தா கட்சி : அமெரிக்க வெளியுறவுத்துறை முறையீடு
கொழும்பு : சட்ட விரோத கொலைகள், ஆட்கள் காணாமல் போதல்
போன்ற மனித உரிமை மீறல்கள், கடந்த ஆண்டு இலங்கையில் நடந்ததாக, அமெரிக்கா
குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சகம், இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்து கடந்த ஆண்டுக்கான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
அறிக்கையில் கூறியுள்ளதாவது:இலங்கையில் சமூக ஆர்வலர்கள், தொண்டு செய்பவர்கள் மீது விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் என்ற முத்திரை குத்தப்பட்டு கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். அரசுக்கு ஆதரவான செய்திகளை வெளியிடும் படி பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.கடந்த ஆண்டில், அரசு படைகளால், சட்ட விரோத கொலைகளும், ஆட்கடத்தலும் நடந்துள்ளன. மனித உரிமை மீறலில் ஈடுபட்ட ஒரு சில அதிகாரிகள் மட்டுமே, அரசால் விசாரிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களிடம் விசாரணை நடைபெறவில்லை.
இலங்கை அரசுடன் கூட்டணி வைத்துள்ள, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, யாழ்பாண பகுதியில், மக்களை மிரட்டி பணம் பறித்தல், அச்சுறுத்தல், ஊழல் மற்றும் வன்முறையில் ஈடுபட்டுள்ளது.பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை தடுக்க, இலங்கை அரசு தவறி விட்டது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதேபோன்ற குற்றச்சாட்டை கடந்த வாரம், பிரிட்டிஷ் அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக