இலங்கை: பொதுநல மாநாட்டை ப் புறக்கணிக்க ஆசுதிரேலியா வலியுறுத்தல்
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்ட் மாநாட்டை
புறக்கணிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மால்கம் பிரேஸர்
உள்பட பலர் அந்நாட்டு அரசை வலியுறுத்தி உள்ளார்.
இலங்கையில் காமன்வெல்த் கூட்டமைப்பு தலைவர்கள் மாநாடு வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இலங்கை தமிழர்கள் மீதான பல்வேறு மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் உள்ள நிலையில் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரி வருகின்றனர்.
இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மால்கம் பிரேஸர் கையெழுத்திட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய தமிழர் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்படாவிட்டால் வேறு நாட்டுக்கு காமன்வெல்த் மாநாட்டை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுவரை கோரிக்கை மனுவில் 2700-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்நாட்டு பசுமைக் கட்சி எம்.பி. லீ ரியானான் கூறியதாவது: போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல் புகார்கள் உள்ள ஒரு நாட்டில் மாநாட்டை நடத்துவது அதன் செயல்பாடுகளுக்கு அங்கீகாரம் அளிப்பது போலாகி விடும். எனவே ஆஸ்திரேலியா இப்பிரச்னையில் முன்னோடியாக செயல்பட வேண்டும் என்றார்.
மனித உரிமை மீறல், சுதந்திரமான நீதித்துறை விவகாரங்களில் இலங்கையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் கனடா நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மனித உரிமை மீறல்களை களைய இதுவரை எந்த உருப்படியான நடவடக்கையையும் இலங்கை அரசு எடுக்கவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக