வெள்ளி, 26 ஏப்ரல், 2013

பொதுநல மாநாடு - இலங்கையில் நடத்தப் பன்னாட்டு அமைப்பு எதிர்ப்பு

பொதுநலக் கூட்டத்தை இலங்கையில் நடத்த ப் பன்னாட்டு  மனித உரிமைகள் அமைப்பு எதிர்ப்பு

காமன்வெல்த் நாடுகள் கூட்டத்தை இலங்கையில் நடத்த சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இலங்கையில் போர் நடைபெற்றபோது நிகழ்ந்த மனித உரிமை மீறல் பிரச்னைகளை மையமாக வைத்தும், இலங்கையில் மனித உரிமைகளைக் காக்க அந்நாட்டு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு இந்த எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இலங்கையில் வரும் நவம்பர் மாதம் காமன்வெல்த் நாடுகளின் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்துக்கான நிகழ்ச்சிகள் பற்றி விவாதிப்பதற்காக காமன்வெல்த் நாடுகளின் அமைச்சக நிலையிலான பிரதிநிதிகளின் கூட்டம் லண்டனில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) நடைபெறுகிறது. இந்த சூழ்நிலையில் இலங்கையில் கூட்டத்தை நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் ஆசிய பிரிவு இயக்குநர் பிராட் ஆடம்ஸ் கூறியது: காமன்வெல்த் நாடுகளின் அமைச்சக நிலை பிரதிநிதிகள் கூட்டம் நடைபெறவுள்ளது.
அக்கூட்டத்தில், காமன்வெல்த் நாடுகளின் மதிப்பை குலைக்கும் வகையில் இலங்கை செயல்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் எங்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை என்று முடிவெடுத்து அந்நாட்டு அரசுக்கு செய்தி அனுப்ப வேண்டும் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக