இராசபக்சே நண்பர் என்னை க் கற்பழித்தார்: இரசிய ப் பெண் முறையீடு
பதிவு செய்த நாள் :
செவ்வாய்க்கிழமை,
ஏப்ரல் 23,
12:05 PM IST
இலண்டன், ஏப். 23-
ரஷியாவை சேர்ந்த பெண் விக்டோரியா சுசேவா (24). இவரது காதலர் கரூம் ஷேக் (32) இங்கிலாந்தை சேர்ந்தவர். இவர் செஞ்சிலுவை சங்க அமைப்பில் பணியாற்றினார்.
இலங்கையில் இருந்த இவரை சந்திக்க விக்டோரியா கடந்த 2011-ம் ஆண்டு அங்கு சென்றார். கிறிஸ்துமஸ் தினத்துக்கு ஒருநாள் முன்பு காதலர் ஷேக்குடன் கங்காலை பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அவர் தங்கியிருந்தார். அப்போது, அவர் 8 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டார். அதை தடுத்த காதலர் கரூம் ஷேக் படுகொலை செய்யப்பட்டார்.
இவர்களை கைது செய்த இலங்கை போலீசார் பின்னர் அனைவரையும் ஜாமீனில் விடுவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே ரஷியா சென்ற விக்டோரியா தற்போது அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்து பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:- சம்பவத்தன்று நாங்கள் தங்கிருந்த விடுதிக்கு 8 பேர் கொண்ட கும்பல் மது போதையில் வந்தனர். அவர்கள் என் மீது பாய்ந்து நீச்சல் குளத்தில் தள்ளி விட்டனர். அதை தடுத்த ஷேக்கை அடித்து உதைத்து கீழே தள்ளி துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். பின்னர் என்னை கற்பழித்தனர்.
அவர்களில் ஒருவர் பெயர் சம்பத்சந்திரா புஷ்பவிதனபத்திரன். இவர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமான நண்பர். கங்காலை நகராட்சியின் உறுப்பினராக உள்ளார். அவரது பெயருடன் போலீசில் புகார் செய்தேன். ஆனால் அவரை கைது செய்த போலீசார் அனைவரையும் ஜாமீனில் விடுதலை செய்தனர்.
இவர்கள் மீதான கற்பழிப்பு புகாரை போலீசார் சரிவர விசாரிக்கவில்லை. சம்பத்சந்திரா ராஜபக்சேவின் நண்பர் என்பதால்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியுள்ளார்.
ஆனால், இந்த விவ காரத்தில் டி.என்.ஏ. பரிசோதனை முடிவுக்கு காத்திருப்பதாக இலங்கை அரசு கூறி வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக