0/0  

பெண்கள், குழந்தைகள், வயோதிகள் உள்ளிட்ட மூன்று இலட்சம் தமிழர்கள், இலங்கையின் சிங்கள இனவெறி அரசால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகளைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகின்றேன்.
vaiko1இரத்தத்தாலும், கண்ணீராலும் எழுதப்பட்ட ஈழத்தமிழர்களின் வரலாற்றை விளக்கும் புத்தகத்தையும், படுகொலைக் காட்சிகளைச் சித்தரிக்கின்ற ஈழத்தில் இனக்கொலை; இதயத்தில் இரத்தம் என்ற குறுவட்டினையும் தங்கள் பார்வைக்காக இத்துடன் இணைத்து உள்ளேன்.
ஈழத்தமிழர்கள் படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும், இனப்படுகொலைக் குற்றம் புரிந்த சிங்கள ஆட்சியாளர்களை, உலக நீதிமன்றத்தின் குற்றக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்கவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் உறுப்பு நாடாகிய தங்களது நாடு, வருகின்ற மார்ச் மாதத் தொடக்கத்தில், ஜெனீவா நகரில் நடைபெற இருக்கின்ற மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் குரல் எழுப்ப வேண்டும் என்று, தமிழகத்திலும், உலகெங்கும் பல நாடுகளில் பரந்து வாழும் தமிழர்களின் சார்பாக வேண்டுகிறேன்.
ஈழத்தமிழர்கள் எழுப்புகின்ற அவலக்குரல், இப்போது உலக நாடுகளின் மனசாட்சிகளைத் தட்டுகின்றது.
அவர்களது கண்ணீரைத் துடைப்பதற்காகவும், அவர்களுக்கு ஒரு புதிய விடியலை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவும், தங்களது நாடு உறுதுணையாக இருக்க வேண்டும் என, மிகுந்த வேதனையோடு வேண்டுகிறேன்.
இவ்வாறு, வைகோ தமது கடிதத்தில் கேட்டுக் கொண்டு உள்ளார். இக்கடிதம், டெல்லியில் உள்ள மேற்கண்ட நாடுகளின் தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
‘தாயகம்’ தலைமைக் கழகம்
சென்னை-8 மறுமலர்ச்சி தி.மு.க.
U,S, Embassy