வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

எல்லோருக்கும் தலைவர் இராமச்சந்திரனார் பாதுகாவலர்

இங்கே இரு கருத்துகளைப் பதிகின்றேன்.
 1.) பாவண்ணன் போன்றவர்கள் நன்கு படித்துக் கருத்தைப் பதிய வேண்டும். 1932 இல் நடைபெற்ற நிகழ்வு. உரியவர் முன்பே இறந்து விட்டார். இப்போதைய நிகழ்வுபோல் பணி சிறக்க வாழ்த்துவோம் எனக் குறிப்பிடலாமா?

2.) தோழர் இராமசாமி தேர்ந்து எடுக்கப்பட்டார் என்பதை விடப் பகுத்தறிவுச் சுடர் சிவகங்கை இராமச்சந்திரனாரால் அமர்த்தப்பட்டார் என்பதே உண்மை. இது பற்றிய வே.வ.இராமசாமி அவர்களின் கட்டுரைப் பகுதி வருமாறு:
“அரசால் கோவில் ஆலோசனைக் குழு என்ற ஒன்று இராமநாதபுர மாவட்டத்துக்கு நியமனம் செய்யப்பட்டது. அதற்கு அழுத்தமான சுயமரியாதை வீரராகிய தலைவர் சிவகங்கை இராமச்சந்திரனார் தலைவராவார். . . . . . தலைவர் அவர்களுக்கு உடல்நலம் குறைந்ததால், 11.6.32. அன்று தன்னுடைய இல்லத்தில் குழுவின் கூட்டத்தைக் கூட்டினார்.......எனவே, “வி.வி.ஆர். அவர்களைத் தலைவராக இருக்கும்படிக்கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் சொன்னவுடனே எனக்கு ஒன்றும் புரியாமல், வியப்பில் ஆழ்ந்து விட்டேன். “இப்போது ஒன்றும்தேவையில்லையே, பின்னால் பார்க்கலாமே” என்று வாதிட்டேன். செவிசாய்க்காமல், . . . . . .உதவியாளரால் நடவடிக்கைகள் எழுதப்பட்டு, புத்தகத்தில் யாவருடைய கையொப்பமும் வாங்கப்பட்டது. ...
எஙகள் சமுதூயத்துக்கு அவர் செய்த இப்பேருதவியை யான் என்றும் மறந்ததில்லை.

தாழ்த்தப்பட்டவர்கள், அரிசனங்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள், அடிமைகள், பாதுகாப்பற்றவர்கள் என எல்லோருக்கும் தலைவர் இராமச்சந்திரனார் பாதுகாவலராக இருந்தார்.
எங்கள் அனைத்துச்சமுதாய மக்களுக்கும் அவர் நல்ல வழிகாட்டிய தலைவர் என்பதை நன்றியுடன் இங்கு நினைவுபடுத்திக் கொள்கிறேன். என்னை உயர்த்திய தலைவர் இராமச்சந்திரனார். (கொடைக்கானல் காந்தி எழுதிய சிவகங்கை இராமச்சந்திரனார் : பக்கம் 307-309)
(நேற்று சிவகங்கை இராமச்சந்திரன் அவர்களின் மனைவி திருவாட்டி கிருட்டிணம்மாள் நினைவுநாள்)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
## நமது இயக்கத் தோழர் விருதுநகர் திரு.வி.இராமசாமி அவர்கள் ராமநாதபுரம் ஜில்லா தேவஸ்தானக் கமிட்டி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அன்பர் திரு இராமசாமி அவர்கள் நாடார் என்று வழங்கப்படும் குலத்தவராவார்.நாடார் குலத்தவர் மற்ற ஜாதியாரைக் காட்டிலும் தாழ்ந்த ஜாதி எனக் கற்பித்து வைதீகர்களும், வருணாசிரமிகளும் நாடார் பெருமக்களுக்கு கோயில் நுழைவு உரிமை மறுக்கப்பட்டிருந்தது நேயர்கள் அறிந்த ஒன்றாகும்.அவ்வாறிருந்தும் அத்தகைய "புனித தெய்வீகம்" பொருந்திய கோவில்களின் கமிட்டி ஆலோசனைத் தலைவராக தோழர் ராமசாமி தேர்ந்தெடுக்கப் பட்டது கண்டு மகிழ்வதோடு அவரைப் பெரிதும் பாராட்டுகிறோம். --- 19.06.1932 ல்குடி அரசு தலையங்கத்தில் பெரியார் எழுதியது
 +++++++++++++++++++++++++++++++++++++++
பின் வரும் கருத்துகளுக்கான பதிவு 

நமது இயக்கத் தோழர் விருதுநகர் திரு.வி.இராமசாமி அவர்கள் ராமநாதபுரம் ஜில்லா தேவஸ்தானக் கமிட்டி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அன்பர் திரு இராமசாமி அவர்கள் நாடார் என்று வழங்கப்படும் குலத்தவராவார்.நாடார் குலத்தவர் மற்ற ஜாதியாரைக் காட்டிலும் தாழ்ந்த ஜாதி எனக் கற்பித்து வைதீகர்களும், வருணாசிரமிகளும் நாடார் பெருமக்களுக்கு கோயில் நுழைவு உரிமை மறுக்கப்பட்டிருந்தது நேயர்கள் அறிந்த ஒன்றாகும்.அவ்வாறிருந்தும் அத்தகைய "புனித தெய்வீகம்" பொருந்திய கோவில்களின் கமிட்டி ஆலோசனைத் தலைவராக தோழர் ராமசாமி தேர்ந்தெடுக்கப் பட்டது கண்டு மகிழ்வதோடு அவரைப் பெரிதும் பாராட்டுகிறோம். --- 19.06.1932 ல்குடி அரசு தலையங்கத்தில் பெரியார் எழுதியது
2Like · ·
  • 2 people like this.
  • Pavanan Vck அவரைப் பாராட்டக்கூடாது அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்களை தான் பாராட்டவேண்டும்.எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். தோழரின் பதவிக் காலம் முடிந்தப் பின்பு கிராம மக்கள் பாராட்டும் வண்ணம் அவரின் பணிச்சிறக்க வாழ்த்துவோம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக