திருப்பதியில் தமிழ் ஊடகங்களுக்கு க் கட்டுப்பாடு
திருப்பதி : இலங்கை அதிபர் இராசபக்சே, திருப்பதி வந்துள்ளதையடுத்து, அங்கு
தமிழ் ஊடகங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து
வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு
அமைப்புகளின் கடும எதிர்ப்புகளுக்கிடையில், இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா
வந்துள்ளார். பீகார் பயணத்தை முடித்து விட்டு, அவர் தற்போது திருப்பதி
வந்துள்ளார். இந்நிலையில், செய்தி சேகரிக்கச் சென்ற தமிழ் பத்திரிகை
மற்றும் ஊடக ஊழியர்கள் திருப்பதி விமானநிலையத்தில் தடுத்து
நிறுத்தப்பட்டனர். தமிழ் ஊடகங்களை அனுமதிக்கக் கூடாது போலீஸ்
உயர்அதிகாரிகள் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கு தெலுங்கு ஊடக
நண்பர்கள் கண்டனம் தெரிவித்ததையடுத்து, கடும் சோதனைகளுக்கு பிறகு தமிழ்
ஊடகங்கள், திருப்பதி செல்ல அனுமதிக்கப்பட்டது. இது கருத்து சுதந்திரத்தை
பறிக்கும் செயல் என்று சமூக நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக