தமிழர் எழுச்சி இயக்கத்தின் தலைமை அஞ்சல் நிலைய முற்றுகைப் போராட்டத்தால் அண்ணா சாலை வாகனப்போக்குவரத்து 1 மணி நேரம் முடங்கியது.!. இன்று (08/02/2013) காலை 11 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தை கொடுங்கோலன் இராஜபக்சே இந்திய
வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து "தமிழர் எழுச்சி இயக்கத்தைச் சார்ந்த 70
க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் முற்றுகையிட்டனர்.இதனால் தபால் நிலையம் இழுத்து
மூடப்பட்டது.மேலும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ,இனப்படுகொலையாளன்
ராஜபக்சே ஆகியோரின் கொடும்பாவிகள் அண்ணா சாலையில் கொளுத்தப்பட்டன.இத்துடன்
இலங்கையின் தேசியக்கொடியும் கொளுத்தப்பட்டன.இதனை காவல் துறையினர் தடுக்க
முற்ப்பட்டனர்.ஆனால் அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.வேலுமணி
அவர்கள் எங்களின் போராட்டத்தை முறியடிக்க முயற்சித்தால் நாங்கள் அனைவரும்
தீக்குளிப்போம் என அறிவித்ததால் காவல் துறையினர் ஒதுங்கி நின்றனர்.அனைத்து
அவ்வியக்க தோழர்கள் மற்றும் சட்டகல்லுரி மாணவர்கள் அண்ணா சாலையில்
படுத்துக்கொண்டு ராஜபக்சேவை இந்தியாவிற்குள் அனுமதிக்கக்கூடாது என
முழக்கங்களை எழுப்பியவண்ணம் சாலைமறியலில் ஈடுபட்டனர்.இதனால் 1 மணி
நேரத்திற்கு மேலாக அண்ணா சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது.போராட்டத்தில்
ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைதுசெய்து அருகில் உள்ள
சமுதாயக்கூடத்திற்கு அழைத்து சென்றனர்.
தமிழர் எழுச்சி இயக்கம் ப.வேலுமணி - 9710854760 வெ. குமரவேல் - 9710037465
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக