தமிழகத்தை ச் சேர்ந்தவருக்கு ப் பிரிட்டனின் உயரிய விருது
காரைக்குடியை சேர்ந்தவர்':
பிரிட்டனில்
உள்ள, "தி டவர் ஹாம்லெட்ஸ் கன்ட்ராசெப்ஷன் அண்டு செக்சுவல் ஹெல்த்
சர்வீஸ்' என்ற மருத்துவ பிரிவின் தலைவராக பணிபுரிபவர், தமிழகத்தை சேர்ந்த,
கீதா நாகசுப்ரமணியம். காரைக்குடியை சேர்ந்த இவருக்கு, அந்நாட்டில், பெண்கள்
மற்றும் இளைஞர்களுக்கு, சிறப்பான மருத்துவ சேவையாற்றியதற்காக, அங்கு
வழங்கப்படும் உயரிய கவுரவங்களில் ஒன்றான, "மெம்பர் ஆப் த ஆர்டர் ஆப் த
பிரிட்டிஷ் எம்பயர்' விருது வழங்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் வழங்கப்படும், "பத்மஸ்ரீ' விருதுக்கு நிகரான இந்த அந்தஸ்து,
குறிப்பிட்ட துறைகளில், மிக சிறப்பாக பங்காற்றியவர்களை கவுரவிக்கும்
வகையில், பிரிட்டனின் அரசால் வழங்கப்படுகிறது. இந்த விருதை பெறும் முதல்
தமிழ் பெண் மற்றும் தென் மாநிலத்தை சேர்ந்த பெண் என்ற பெருமையும், இவருக்கு
கிடைத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக