வியாழன், 7 பிப்ரவரி, 2013

குறை தீர்க்கும் ஓகம்!

குறை தீர்க்கும்யோகா!

ஒழுங்கற்ற மாதவிடாய் பருவத்தை,"யோகா' மூலம் தீர்க்கும், மேனகா தேசிகாச்சார்: ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்பட, மேற்கத்திய உணவு கலாசாரமே காரணம். உயரத்திற்கு ஏற்ற எடையை விட கூடுதலாக இருப்பது, ஒரு சில நிகழ்வுகளால் உருவாகும் பயம், டென்ஷன் மற்றும் ஹார்மோன் பிரச்னைகளும் காரணம்.மாதவிடாய் பிரச்னை தொடர்வதால், சரியான உடல் எடை உள்ளவர்கள், நாளடைவில் குண்டாகின்றனர். மூச்சடைப்பு, மூட்டு வலி, முதுகுவலி, திருமணமாகி குழந்தை பெற்றுக் கொள்ள நினைத்தாலும் தாமதமாகவே கருத்தரிக்கும், சில நேரங்களில் கருத்தரிக்கவே இயலாத நிலையும் ஏற்படும்.மாதவிடாய் பிரச்னைகளை, "விபரீத கரணி, த்விபாதபீடம்' எனும், பிரத்யேக யோகா மூலம் தீர்க்கலாம். ஆனால், எல்லா பெண்களும் உடனடியாக செய்ய முடியாது. இந்த குறிப்பிட்ட யோகா செய்வதற்கு, உடல் நன்கு வளைந்து கொடுக்க வேண்டும். அப்படி வளைந்து கொடுத்தால் மட்டுமே, அதற்கான முன் பயிற்சிகளை செய்ய முடியும்.முன் பயிற்சியை, தினமும் காலையில் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும். கைகளை வானத்தை நோக்கி உயர்த்தி, நிமிர்ந்தபடி நிற்க வேண்டும். பின் மூச்சை நன்றாக உள்ளிழுத்தபடி, இடுப்பை வளைத்து, உயரத்தில் பாதியளவு குனிய வேண்டும். இடுப்புக்கு மேலான பகுதியை வளைக்கக் கூடாது. தரைக்கு, "பேரரல்' ஆக இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும். மூன்று முதல், 10 வினாடி வரை மூச்சை நன்கு வெளியேற்ற வேண்டும். ஆறு முறை, இதே போல் செய்யணும்.பின், முன்பு செய்ததை போன்றே உடலை வளைத்து, குனிய வேண்டும். முட்டியை கொஞ்சம் மடக்கிக் கொள்ளலாம். ஆறு முறை செய்யணும். யோகா குருவின் வழிகாட்டுதலோடு, இதுபோன்ற முன் பயிற்சிகளையும், யோகாவையும் செய்வதன் மூலம், மாதவிடாய் குறைபாடுக்கு, சரியான தீர்வு கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக