மத்திய அரசிலிருந்து விலகத் தயாரா?: திமுகவுக்கு வைகோ கேள்வி
ராஜபட்ச வருகையை தடுக்க முடியாவி்ட்டால் மத்திய
அரசிலிருந்து விலகத் தயாரா? என்று திமுகவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தின்போது
செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு தான்
இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறது. எனவே,
மற்ற கட்சிகளைப் போல ராஜபட்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவும்
அறிக்கை வெளியிடுவதை ஏற்க முடியாது. மத்திய அரசு வற்புறுத்தி ராஜபட்ச
வருகையைத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் மத்திய
அமைச்சரவையிலிருந்து திமுக வெளியேற வேண்டும். அதற்கு அக்கட்சி தயாரா? என்று
கேள்வி எழுப்பினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக