அதிகபட்ச மின் உற்பத்தி!
சூரியனின் திசைமாற்றத்திற்கு ஏற்ப,
சூரியனை நோக்கி தானாக நகரும், சோலார் பேனல்களை தயாரித்த, முரளி: மாற்று
எரிபொருளுக்கான புதிய கண்டுபிடிப்புகள் அதிகரித்தாலும், மக்களின் கவனத்தை
சரியாக ஈர்ப்பதில்லை. சூரியனின் வெப்பத்தை, சோலார் பேனல்கள் மின்சாரமாக
மாற்றி, மின்கலன்களில் சேமிக்கின்றன. சோலார் பேனல்கள், மதிய நேரத்தை
தவிர்த்து மற்ற எல்லா நேரங்களிலும், அதிகபட்ச மின்சாரத்தை உற்பத்தி செய்ய
முடியாது. இந்நிலையை மாற்றி, சூரியன் உமிழும் வெப்ப கதிர்களின்
திசைக்கேற்ப, சூரியனை நோக்கி சோலார் பேனல்கள் திரும்பும் தொழில் நுட்பத்தை
கண்டுபிடித்ததன் மூலம், எப்போதுமே அதிகபட்ச மின்சாரத்தை உற்பத்தி
செய்யலாம்.இதற்கு, தரங்கம்பாடியில் அமைந்துள்ள, "ஹைடெக் ரிசர்ச்
பவுண்டேஷன்' உதவியது.சூரிய கதிர்கள், செங்குத்தாக விழும் நேரமான நண்பகல்,
12:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை, சோலார் பேனல்கள், 180 டிகிரியில்
படுக்கை வசமாக இருக்கும்போது, அதிகபட்சமான, 100 சதவீதம் மின்சாரத்தை
உற்பத்தி செய்யும். சூரிய கதிர்கள் சாய்வாக விழும் மற்ற நேரங்களில், 180
டிகிரியில், படுக்கை வசமாக இருக்கும் பேனல்கள், 85 சதவீதத்திற்கும் குறைந்த
அளவில் மட்டுமே, மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும். சூரிய கதிர்கள்
விழும் கால நேரம் கணக்கிடப்பட்டு, அந்த தகவல்கள், நேரம் கணக்கிடும்
கருவியில் பதியப்பட்டு, கருவியின் கட்டளைக்கு ஏற்ப, நான்கு சக்கர வாகனங்களை
தூக்கப் பயன்படும், ஜாக்கி மூலம், சூரிய கதிர்கள் பூமியில் படும் திசைக்கு
ஏற்ப எப்போதுமே, 100 சதவீதம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திசைக்கு,
சோலார் பேனல்கள் திரும்புகின்றன. மாலை சூரியன் மறைந்ததும், மீண்டும்
தன்னுடைய பழைய நிலைக்கே பேனல்கள் திரும்பிவிடும். இவ்வகை தொழில் நுட்பத்தை
மேம்படுத்த கூடுதலாக, 3,000 ரூபாய் மட்டுமே செலவாகும்.
We are progressing faster than the Developed countries.
பதிலளிநீக்கு