சனி, 14 ஜூலை, 2012

தினமணி : தலையங்கம்: இராசபட்சவின் தப்புக்கணக்கு

தினமணி : தலையங்கம்:   ராசபட்சவின் தப்புக்கணக்கு

அதிபர் ராஜபட்சவைப் பொருத்தவரை, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் புலியின் கலையாத தடங்களில் மனக்கலக்கம் கொள்பவராகவே இருக்கிறார் என்பதை அவரது சமீபத்திய நடவடிக்கைகளும், அறிவிப்புகளும் வெளிப்படுத்துகின்றன.அண்மையில் இங்கிலாந்து சென்ற ராஜபட்ச, அங்கு வாழும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் கடும் எதிர்ப்பால் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டுத் திரும்பியதன் தொடர்ச்சியாகத் தமிழர்கள் வாழும் இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலை 2013 செப்டம்பருக்குப் பிறகு நடத்தலாம் என்கின்ற முடிவை அறிவித்திருக்கிறார்.தேர்தலைத் தள்ளிப்போட அவர் அளித்துள்ள முக்கியக் காரணம் வாக்காளர் பட்டியல்தான். தற்போதுள்ள வாக்காளர் பட்டியல் 30 ஆண்டுகள் பழமையானது. தற்போது இப்பகுதியில் அமைதி திரும்பியுள்ளதால், முன்பு புலிகளின் அச்சத்தால் வெளியேறிய தமிழர்கள் திரும்பிவந்து மெல்ல மெல்லக் குடியேறத் தொடங்கியுள்ளனர். ஆகவே புதிய வாக்காளர் பட்டியலைத் தயாரித்த பிறகு இங்கே முறையாகத் தேர்தல் நடத்தப்படும் என்கிறது ராஜபட்ச அரசின் அறிவிப்பு. இது விவரமற்ற பேச்சா அல்லது திட்டமிட்ட சதியா என்பதுதான் நமது சந்தேகம்.கடந்த மூன்று ஆண்டுகளில், வடக்கு மாகாணத்தில் இலங்கை அதிபருக்கான தேர்தல் நடந்தது. தமிழர்கள் வாக்களித்தார்கள். நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அதிலும் தமிழர்கள் வாக்களித்தார்கள். அதிக இடங்களில் தமிழ் தேசியக் கூட்டணி வெற்றி பெற்றது. சென்ற ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போதும் தமிழர்கள் வாக்களித்தார்கள். இப்போது மட்டும் ராஜபட்சவுக்கு ஏன் எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்கிற திடீர் அக்கறை?யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளைக் கொண்ட வடக்கு மாகாணத்தில் தமிழர்கள்தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றனர். ஆகவே வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றால், அங்கே ஒரு தமிழர் முதலமைச்சர் பதவிக்கு வருவார் என்பது நிச்சயம். அங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண அரசு இல்லாத நிலையில், இலங்கை அரசே நேரடியாக நிர்வாகம் செய்யும் தற்போதைய அதிகாரம் குன்றிப்போகும். மாகாண அரசு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும். இந்த அச்சம்தான் ராஜபட்சவைத் தேர்தலைத் தள்ளிப்போட வைக்கிறது.இலங்கையில் தமிழர்கள் அரசியல் சக்தியாக மாறிவிட்டால், ""மேலை நாடுகளின் தீயசக்திகள்'', வடக்கு மாகாணத்தைப் பயன்படுத்தி இலங்கையைப் பிளவுபடுத்தும் என்ற பொய்க்கருத்துகள் இலங்கைப் பத்திரிகைகளில் கசியவிடப்படுகின்றன. இது ராஜபட்சவை நியாயப்படுத்தும் ஏற்பாடுகள்.இத்தகைய கருத்து, குறிப்பாக இங்கிலாந்து சென்று எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க முடியாமல் ராஜபட்ச நாடு திரும்பிய பிறகு உருவாக்கப்பட்டது. அதாவது, கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள், தமிழர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும் வடக்கு மாகாண அரசை இலங்கைக்கு எதிராகத் திருப்பிவிடுவார்கள் என்கின்ற அச்சத்தால் ""மேலை நாடுகளின் தீயசக்திகள்'' என்றெல்லாம் பேசுகிறார்கள்.வடக்கு மாகாணத்தில் தமிழர் ஆட்சி ஏற்பட்டால், உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழர்கள் தங்கள் சகோதரர்கள் வாழுரிமை பெற்றதற்காக மகிழ்வார்கள். எனினும், அவர்களில் பெரும்பாலோர் தாயகம் திரும்பும் நிலையில் இல்லை. இரண்டாவது தலைமுறையின் விழுதுகள் புலம்பெயர்ந்த மண்ணில் வேர்கொண்டிருக்கின்றன. புதிய தொழில், வேலை என்று வாழ்க்கையை அமைத்துக்கொண்டுவிட்ட அவர்களின் இன்றைய விருப்பம் ஈழ மண்ணில் எஞ்சியுள்ள தாயகத் தமிழர்கள், சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதுதான். தங்கள் சகோதரர்கள் துன்பத்தில் சாதல்கூடாது என்பதுதான் அவர்களது விருப்பமாக இருக்க முடியுமே தவிர, அரசியல் செய்வது அல்ல. ராஜபட்ச சொல்லும் காரணத்தை உண்மையென்றே வைத்துக்கொண்டாலும், ஒரு தமிழரின் தலைமையில் வடக்கு மாகாணத்தில் ஆட்சி அமையும்போது மட்டுமே, புலம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் நம்பிக்கையுடன் தாயகம் திரும்புவார்களே தவிர, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படுவதற்காகத் தாயகம் திரும்ப மாட்டார்கள்.அதிபர் ராஜபட்சவின் உண்மையான நோக்கமே வேறாக இருக்கக்கூடும். ஏற்கெனவே, கடந்த மூன்றாண்டுகளில் வடக்கு மாகாணப் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றும் பணி அதிவிரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாகாணத் தேர்தலுக்கு முன்னால் கணிசமாகக் குடியேற்றம் ஏற்பட்டுவிட்டால், தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் குறைவாக இருக்கச் செய்துவிட முடியும் என்பதுதான் அதிபர் ராஜபட்சவின் திட்டமாக இருக்கக்கூடும்.இலங்கையின் அரசியல் சட்டம் மாற்றப்பட்டு இந்தியாவைப்போல நாடாளுமன்ற ஜனநாயக முறை அமலுக்கு வராதவரை, பெருவாரியான சிங்களர்களின் பிரதிநிதி மட்டுமே சர்வ வல்லமை பெற்ற அதிபராக முடியும் என்கிற நிலைமை தொடரும்வரை, இலங்கைவாழ் தமிழர்கள் சம உரிமை பெற்று வாழ முடியாது என்பதுதான் நிதர்சன உண்மை. இதை வலியுறுத்த அங்கேயும் யாருமில்லை, இந்திய அரசும் தயாராக இல்லை, சர்வதேசத் தலைவர்களும் அக்கறை காட்டுவதில்லை.இலங்கையின் அடிப்படைப் பிரச்னையே இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தில் முழுமையான பங்கு அளிக்கப்படவில்லை என்பதுதான். அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டதால்தான், ஏன் மறுக்கிறீர்கள் என்று கேட்டவர்களை வன்முறையால் ஒடுக்கி, மனித உரிமைகள் மிதிக்கப்பட்டபோதுதான், அந்த மண்ணில் மிதிவெடிகள் பரவலாகின.இத்தனை காலத்துக்குப் பின்னர் அங்கே இயல்பான அரசியல் சூழல் தானாகவே எழுகிறது. அதை ஏன் ராஜபட்ச மறுக்க வேண்டும்? அவருக்கு உண்மையிலேயே ஜனநாயகத்தின் மீது மரியாதையும், தமிழர்கள் மீது அக்கறையும் இருக்குமேயானால், அவர் வடக்கு மாகாணத் தேர்தலைத் தள்ளிப்போடாமல் உடனடியாக நடத்த வேண்டும்.நடத்தாமல் போனால்? ஒருவேளை, சரித்திரம் திரும்பக்கூடும்!
கருத்துகள்

கருணாநிதி தனதும் தந்து குடும்ப நலுனுகாகவும் ஒரு இனத்தை அழிக்க துணை நிண்டு தமிழகத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டார் அதன் பயனை அவருக்கு இயற்கை அன்னை நிச்சயம் கொடுப்பாள்
By pillai
7/14/2012 3:52:00 PM
Well said, GoSL is lying, breaking promises and deceiving. The Srilanka constitutional act gives powers to the tyrannicaL state to annihilate its minority community. Unless the UN must take effective steps to ensure the rights of the Tamil community. Otherwise no assurance of political rights. Every GoSL will never bring justice and rule of law to restore everlasting peace and harmony in the country.
By வசந்தகுமார்.
7/14/2012 2:37:00 PM
நல்ல தலையங்கம், தினமணி, தேவை படும் பொது நல்ல கருத்தை வேலிடுகிறது
By babu
7/14/2012 1:22:00 PM
காஷ்மீரில் நாம் செய்கிறோம், சீனாவும் சின்சியாங்கில் செய்கிறது, பாகிஸ்தான் அசாத் காஸ்மீரில் செய்கிறது, இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் செய்கிறது, ராசபக்சே வடக்கு கிழக்கு மாகாணத்தில் செய்கிறான். இதில் என்ன புதியது உள்ளது. விடுங்கப்பா.
By பெரும்பான்மை
7/14/2012 1:06:00 PM
இது எல்லா நாட்டு அரசியல் தலைவர்களும் செய்யக் கூடிய ஒன்றே இந்திய பாகிஸ்தான் சீனா மற்றும் பலநாடுகளில் சிறுபான்மை மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் பெரும்பான்மை சமுதாய மக்களை குடியேற்றி அவர்களின் அரசியல் பலத்தை குறைப்பார்கள். இந்திய நாட்டில் கூட தொகுதி மறு சீரமைப்பு செய்யும்போது முஸ்லிம்கள் அதிகம் வாழக்கூடிய பகுதிகளை பிரித்து பெரும்பான்மை சமுதாய மக்கள் வாழும் பகுதிகளோடு இணைத்து முஸ்லிம்களின் அரசியல் பிரவேசத்தை தடுக்கும் வேலையும் நடந்தது. அதை பின்பற்றி ராஜபக்சே செய்கிறார் போலும். இது இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் நடக்கும் ஒன்றே அச்சப்பட ஒன்றுமில்லை
By அப்துல் காதர்
7/14/2012 12:33:00 PM
நல்ல தலையங்கம். தன்னலம் பாராத எம்.ஜி.ஆர் அவர்கள் இல்லாததும், ஈழப்பிரச்சனையை அரசியலாக்கி ஆட்சியில் அமரத்துடிக்கும் ஜெயா, கருணாநிதி இருக்கும் வரையிலும், ஈழப்பிரச்சனைக்கு முடிவு ஏதும் ஏற்படப்போவதில்லை. வைகோ ஆட்சிக்கு வந்தால் நிலைமை மாறுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.
By தஞ்சை ராஜு
7/14/2012 12:14:00 PM
தனியே சிங்கள படைகள் ..போராளிகளை வெல்வது இன்னும் நூறு வருடங்கள் சென்றாலும் நடக்க முடியாதது ஒன்று ...மொத்தம் 33நாடுகள் இந்திய தலைமையில் இலங்கைக்கு கேடத்ல்லாம் கொடுத்து இறங்கியதால் ..இந்த செயற்கை தற்காலிக மகிழ்ச்சி சிங்களவனுக்கு ...உண்மையில் பலன் அடைந்தது சீனா ...அதரவு தரும் மக்களை ஒழித்தான் மூலம் ..தனது பாதுகாப்பையே கேள்விகுறியாகிவிட்டது இந்தியா ...முட மன நோயாளி கருணாநிதி தமிழ் துரோகி என்னும் பெயரை சரித்திரத்தில் பெறப்போகின்றான் ...
By KOOPU
7/14/2012 12:10:00 PM
ராஜபட்சே அவர்களே உங்கள் மண்ணின் வளர்ச்சிக்கு பாதி காரணம் இலங்கை வாழ் தமிழர்களே. அவர்களுக்கு உண்டான உரிமையை கொடுத்து நீங்களும் உங்கள் மக்களும் (தமிழர்களையும் சேர்த்து)அமைதியுடன் என்றும் வாழலாம். இல்லையேல் நீங்கள் தப்பு கணக்கு போட்டால் தலையங்கத்தின் கடைசி வரி ப்படி சரித்திரம் நிச்சயமாக திரும்பும்.
By நீ. girivasan
7/14/2012 10:02:00 AM
ராஜா கோட்ச வை சொல்லி குட்ட்ரமில்லை தப்பு இர்ருக்குமிடம் சோனியாவிடம.அரச பயங்கரவாததின் மொத உருவம் சோனியா ஆட்டுது ரஜெபட்ச அடுரான்
By MURUGAN
7/14/2012 9:59:00 AM
Mr.Rajapakshe is One Murder.He was given sharpened knife by India. He did maximum Job(Murder's work) But he is worrying for rest ofthe innocent. But India does not knows to get back knife. Because It gives (knife)on dark back ground to achive single woman's revenge. Now Dinamani only all the time decipate Tamils problem. Vazhga Dinamani Velgha Dinamani's Aim
By vaisu
7/14/2012 9:41:00 AM
...அருமையான தலையங்கம் ! முந்தைய முதல்வர் ஈழம் போர் கடை கட்டத்தில் எவ்வாறு சுய நலத்தால் தமிழர் லக்ஷக்கணக்கில் மடிய, கொல்ல உடந்தையானார் என்பது நிதர்சனம் ! அவர் செய்தது அவரது மனசாக்சியே அவரை வருத்தும் ! இப்போது அவருக்கு இன்னொரு வாய்ப்பு நல்ல பெயர் செய்ய கிடைத்துள்ளது ! அவர் தனக்குள்ள சக்த்தியை பயன்படுத்தி மத்திய அரசை ராஜபக்சேயின் கடிவாளத்தை பிடித்தால் அவர் தன் இழந்த கௌரவத்தை மீண்டும் பெறலாம் .அவர் செய்வாரா என்பது கேள்விக்குறி !
By ர.Krishanmurthy
7/14/2012 8:32:00 AM
நல்ல தலையங்கம் .தேர்தல் நடந்தாலும் நட்டகமல் போனாலும் நிச்சயம் சரித்திரம் திரும்ப கூடும். இதனை துரித படுத்தும் வகையில் வரும் 2014 இந்திய தேர்தல் இதனை சாதிக்க உரு துணையாக இருக்கும் அடுத்த ஈழ போர்ர் தான் இலங்கை யில் இன உறவுக்கு வழிகோலும் இதனை புலம் பியென்ற தமிழர்கள் சாதித்து காட்டுவார்கள் இந்தியர்களை நம்பி இருக்காமல் இவர்களின் போராட்டம் தனித்து இயங்க வேண்டும் இனி தேர்வு செய்யப்படும் எம்பீக்கள் இன துரோகத்திற்கு துணை போக விட போவதில்லை .தினமணி அம்மா போன்ற நல்ல உள்ளங்கள் தமிழ் ஆர்வலர்கள் ஈழத்தின் புதிய விடியலுக்கு துணை நிற்பார்கள் அம்மாவின் விசுவாசி
By அம்மாவின் விசுவாசி
7/14/2012 8:15:00 AM
காங்கிரசும் அப்போது தரித்திரமாகியிருக்கும்.எனவே சரித்திரமும் மாறும்.
By labamsivasamy
7/14/2012 6:39:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக