முடக்கிய விதி நிமிர வைத்த எழுதுகோல்!
என் சொந்த ஊர் கும்பகோணம். ஏழு குழந்தைகள் இருந்த வீட்டில், நான் தான் மூத்தவள். ஜெயில் வார்டனான அப்பாவின் பணி மாறுதல் காரணமாக, சென்னைக்கு வந்தோம். எம்.ஏ., தமிழ் முடித்ததும், எனக்கு மணம் முடித்தனர். பத்திரிகைகளில் நிறைய கதைகள் எழுதினேன். ஆனால், குடும்பம், குழந்தை என்று ஓடிய ஓட்டத்தில், பேனாவிற்கு மை ஊற்ற நேரமில்லாமல் அதில் கவனம் செலுத்த இயலவில்லை. வீட்டிற்கு அருகில் இருந்த பள்ளியில், தமிழ் ஆசிரியரானேன்.இந்நிலையில், 23 ஆண்டுகளுக்கு முன், நாங்கள் கட்டிக் கொண்டிருந்த வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து, எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தேன். இடுப்பிற்கு கீழே உணர்வே இல்லாமல், வீல் சேரில் அமரும் நிலைக்கு ஆளா னேன். மன வேதனைகளை விட, என் மேல் பிறர் காட்டிய பரிதாபப் பார்வைகளைச் சகிக்க முடியவில்லை. கணவர் தான், முழு துணையாக இருந்து என்னை மீட்டார். மீண்டும் பள்ளியில் வகுப்பெடுக்கும் அளவிற்கு, என்னை தேற்றினார்.என் உறவினர் ஒருவரின் தூண்டுதலால், மீண்டும் என் எழுத்தார்வம் தலை தூக்கியது. கிடைக்கும் நேரங்களில் எழுத ஆரம்பித்தேன். குழந்தைகளுக்கான புத்தகம், பெண்களுக்கான சமையல் மற்றும் வீட்டுக் குறிப்புகள், சுய தொழில் வழிகாட்டி புத்தகங்கள் என, நிறைய எழுதினேன். என் எழுத்து, பல மனிதர்களின் நட்பையும், அன்பையும் இருந்த இடத்தில் இருந்தே எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.விதிக்கும், வேதனைக்கும் உதாரணமாகச் சொன்னவர்கள், இன்று தன்னம்பிக்கைக்கு என்னை மேற்கோள் காட்டுகின்றனர். கணவருக்கும், என் ஒரே மகளுக்கும், என்னைப் பற்றிய வருத்தத்தை விட, பெருமையை, சந்தோஷத்தைத் தந்த தருணங்களே அதிகம். நான் எழுதிச் சம்பாதிக்கும் பணத் தை, மாற்றுத் திறனா ளிகள் அமைப்பிற்காக, கொடுத்து வருகி றேன். இப்போது, என் வயது 56; விரல்களில் பேனா பிடிக்கும் தெம்பிருக்கும் வரை, எழுதிக் கொண்டே இருப்பேன்.
- எழுத்தாளர் புனிதவள்ளி

எழுதுவது போலவே வாழ்ந்து வரும் தங்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு